கே.எல் ராகுல் பொறுப்பான ஆட்டம்; டிராவை நோக்கி ஓவல் டெஸ்ட்
இங்கிலாந்து அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் கே.எல் ராகுலின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் இன்றைய நாளின் உணவு இடைவேளை வரை இந்திய அணி 167 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து – இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.

464 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தவான் (1), புஜாரா (0), விராட் கோலி (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 2 ரன்னிற்குள் 3 விக்கெட்டை இழந்தது.
அடுத்து 4-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். லோகேஷ் ராகுல் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தியா நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் 46 ரன்னுடனும், ரகானே 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடிவு செய்தனர். லோகேஷ் ராகுல் 57 பந்தில் 9 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய ரகானே 37 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த விஹாரி ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். 6-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார்.
ஒருபக்கம் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் லோகேஷ் ராகுல் 118 பந்தில் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். இது சர்வதேச அளவில் அவரின் ஐந்தாவது சதமாகும்.

லோகேஷ் ராகுல், ரிஷப் பந்த் ஆகியோர் கடைசி நாள் மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்துள்ளது. லோகேஷ் ராகுல் 108 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
KL Rahul brings up his 5th Test century and first in England. #ENGvINDhttps://t.co/OC3cVErii5
— Khurram Siddiquee (@iamkhurrum12) September 11, 2018