மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம்
நீதிமன்ற வழக்கு விசாரணை எதிரொலியாக இந்தியாவுடன் நடக்கவுள்ள இரண்டாம் டெஸ்டில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிஸ்டல் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில் இருவருடன் பென் ஸ்டோக்ஸ் தகராறில் ஈடுபட்டு தாக்கிக் கொண்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அவரது துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கிடையே தற்போது தொடங்கியுள்ள இந்தியா டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் ஸ்டோக்ஸ் அபாரமாக பந்துவீசி இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டார்.
இந்நிலையில் பிரிஸ்டல் நகர நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக திங்கள்கிழமை ஸ்டோக்ஸ் ஆஜரானார். அவருடன் அப்போது தகராறில் ஈடுபட்ட ரேயான் அலி, ரேயான் ஹாலேயும் ஆஜராகினர். இந்த விசாரûணை 7 நாள்கள் வரை நடைபெறும் எனத் தெரிகிறது.
வரும் 9-ஆம் தேதி லார்ட்ஸில் இரண்டாம் டெஸ்ட் தொடங்க உள்ள நிலையில் அதில் ஸ்டோக்ஸ் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையில் ஸ்டோக்ஸ் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் அவரது கிரிக்கெட் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.