ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் உத்தேச ஆடும் லெவன்
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் போராடி தோல்வியடைந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் படுதோல்வியையும், மூன்றாவது போட்டியில் வெற்றியும் பெற்றது. இதன் பின் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நான்காவது போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து 1-3 என்ற கணக்கில் தொடரையும் இழந்தது.
இங்கிலாந்து அணி ஏற்கனவே தொடரை வென்றுவிட்ட நிலையில் இரு அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் துவங்க உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் உத்தேச ஆடும் லெவனை இங்கு பார்ப்போம்.
அலெய்ஸ்டர் குக்;
இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே கடுமையாக சொதப்பி வரும் அலெய்ஸ்டர் குக், இந்திய அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இதனால் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இவரை நீக்கும் முடிவை இங்கிலாந்து நிர்வாகம் எடுக்காது என்பதில் சந்தேகம் இல்லை. இங்கிலாந்து அணிக்காக பல சாதனைகள் புரிந்திருக்கும் இவருக்கு வெற்றியுடன் விடை கொடுக்கவே இங்கிலாந்து அணி விரும்பும்.
