ரோஹித் சர்மா லிமிடெட் ஓவர்களில் கடந்த மூன்று வருடங்களாக முன்பில்லாத அளவிற்கு ஆடி வருகிறார். இவர் தவானுடன் இணைந்து சிறப்பான துவக்கத்தை அமைத்து தருகிறார்.தற்போது நம்பமான துவக்க வீரர் என்ற அளவிற்கு ஆடி வருகிறார். ஒரு நாள் போட்டியில் மூன்று இரட்டை சதம் நடித்துள்ள ஒரே வீரர் இவர் தான்.
மேலும், டி20 போட்டியில் மூன்று சதம் விளாசிய இரண்டாவது வீரரும் இவர் தான். இதற்க்கு முன்பு நியூசிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரர் காலின் முன்ரோ மூன்று சதங்கள் அடித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தன ரோஹித் சர்மா தனது டி20 யின் மூன்றாவது சாதத்தை பூர்த்தி செய்தார். இவர் அடித்த 56 பந்துகளில் 100 ரன்கள் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மூன்றாவது போட்டியிலும் மற்றும் தொடரை வெல்லவும் உதவியாக இருந்தது.
மூன்றாவது போட்டியில் துவக்கத்தில் தவான் மற்றும் கே எல் ராகுல் இருவரும் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், கேப்டன் விராத் கோலியுடன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தது மேலும் வெற்றியை உறுதி செய்தது. 47 ரங்களுக்கு விராத் கோலி அவுட் ஆகி வெளியேற, ஹார்திக் பாண்டியவுடன் சேர்ந்து ஆடி சதம் அடித்தார் ரோஹித்.
ரோஹித் ஆட்டம் சரளமாகவும் தவறில்லாமலும் உள்ளது – கங்குலி
நான் முன்னதாகவே இரண்டாவது போட்டியின் முடிவில் ரோஹித் பந்துகளை அனைத்து மூலைகளிலும் அடிக்கக்கூடியவர் என கூறியது போல், அதை நிரூபிக்கும் விதமாக மூன்றாவது போட்டியில் அவர் சதம் விளாசி வெற்றிக்கு உதவியிருக்கிறார். அதுவும் அணிக்கு தேவையான நேரத்தில் அடித்தது மிகவும் சிறப்பு என கூறினார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி.
ரோஹித் சரளமாகவும் நேர்த்தியாகவும் ஆடுகிறார். அவரது ஆட்டத்தில் தற்போது தவறுகள் மிகவும் குறைந்துள்ளது. அவரை நீண்ட நாட்கள் பெரிய ஸ்கோர் அடிக்காமல் தடுக்க முடியாது. அவ்வப்போது தன்னை நிரூபித்து கொண்டு தான் இருக்கிறார் என தெரிவித்தார்.
ரோஹித் 3 டி20 போட்டிகளில் 137 ரானால் அடித்தார். இது தொடரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மேலும் இவரது சராசரி 68.50 ஆகும்.