ரீ எண்ட்ரி கொடுத்த முக்கிய வீரர்; முதலில் பேட்டிங் செய்கிறது இங்கிலாந்து
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தநிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது.
இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இந்த போட்டிக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில், சாம் கர்ரான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் இடம்பிடித்துள்ளார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி;
ராய் பர்ன்ஸ், டாமினிக் சிப்லி, ஜாக் க்ராவ்லே, ஜோ ரூட் (கேப்டன்), ஓலி போப், ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), கிரிஸ் வோக்ஸ், டாமினிக் பெஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி;
ஷான் மசூத், அபித் அலி, அசார் அலி (கேப்டன்), பாபர் அசாம், ஆசாத் சபிக், பவத் ஆலம், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), யாசிர் ஷா, முகமது அப்பாஸ், ஷாஹின் அப்ரிடி, நஷிம் ஷா.