இன்று மீண்டும் துவங்கும் கிரிக்கெட் போட்டி… அதிலும் ஒரு சிக்கல்
விண்டீஸ் – இங்கிலாந்து இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று துவங்குகிறது.
பல நாள் காத்திருப்புக்குப் பின் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் தொடர் நடக்கவிருக்கிறது மார்ச் மாதம் நடக்க இருந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து இடையிலான மூன்று டெஸ்ட் தொடர்கள் கொரோனா பாதிப்பின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது பின் பல நாட்கள் கழித்து ஏஜஸ் பவுல் மைதானத்தில் சௌதோம்ப்டாநில் நடக்கவுள்ளது.
இந்த இக்கட்டான காலகட்டத்திலும் கிரிக்கெட் ரசிகர்களுக்காக எடுத்த முயற்சி ,மற்ற நாடுகளுக்கு ஒரு பாடமாக அமைவதற்கான வாய்ப்பு உள்ளது அங்கு நடக்க உள்ள கிரிக்கெட் விட மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெற உள்ளது, விளையாட்டு வீரர்கள் தினந்தோறும் கொரோன பரிசோதனை மேற்கொண்ட பின்னரே விளையாட அனுமதிக்கப்படுவர்.
அதில் எவருக்கேனும் கொரோனா தொற்று உறுதியாகிவிட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை களமிறங்குவார் என்று ஐசிசி முடிவெடுத்துள்ளது. மேலும் மைதானத்தில் எச்சில் துப்புதல் போன்றவற்றை தடை செய்யப்பட்டுள்ளது மற்றும் அதிகமான டிஆர்எஸ் கருவி கருவிகள் கொண்டு விளையாட்டு கண்காணிக்கப்படும் என்று ஐசிசி உறுதியளித்துள்ளது.
It’s not as bad as it looks ??
Good morning from the Ageas Bowl! ? pic.twitter.com/m64Q5uxpT3
— England Cricket (@englandcricket) July 8, 2020
இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் ஏனெனில் போன வருடம் இங்கிலாந்து அணியை அதன் சொந்த நாட்டிலேயே மேற்கிந்திய அணி திகைபடைய செய்தது எனவே அதற்குப் பழிவாங்கும் வகையில் இப்போட்டி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழையின் காரணமாக டாஸ் போடுதல் தாமதம் ஏற்பட்டுள்ளது.