இனி இந்த பக்கமே வர மாட்டாரு… தலைசிறந்த வீரர் ஜோ ரூட்டை கண்டுகொள்ளாத அணிகள்
ஒரு கோடியை ஆரம்ப விலையாக நிர்ணயத்தை இங்கிலாந்து அணி நட்சத்திர வீரர் ஜோ ரூட்டை எந்த அணியும் வாங்க முன் வரவில்லை.
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் கோலாகாலமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 405 வீரர்கள் இடம்பெற்றிருக்கும் இந்த ஏலத்தில் 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுத்து வருகிறது.
டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்த வேண்டும் என 2022 ஐபிஎல் தொடரை ஓரம் கட்டிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட், 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் முதல் செட்டில் இடம் பெற்ற இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட், ஆரம்பம் விலையாக ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டார். கேப்டன் இல்லாமல் தவிக்கும் ஏதாவது ஒரு அணி இவரை வாங்கும் என எதிர்பார்த்த நிலையில், இவரை எந்த அணியும் இவரை வாங்குவதற்கு முன் வரவில்லை . இதனால் ஜோ ரூட் கடைசியாக மீண்டும் ஒருமுறை ஏலத்தில் விடப்படுவார்.
இங்கிலாந்து அணிக்காக மூன்று விதமான தொடரிலும் சிறப்பாக செயல்பட கூடிய நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் தற்பொழுது வெறும் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடி வருவதால், இவரை எந்த அணியும் வாங்க முன்வராமல் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.