எங்களுக்கு எல்லையே கிடையாது; இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் சொல்கிறார் !! 1
எங்களுக்கு எல்லையே கிடையாது; இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் சொல்கிறார்

ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் போட்டியில் 484 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு இனி வானம் தான் எல்லை என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 ஒருநாள், 1 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து அணி வென்றது .

எங்களுக்கு எல்லையே கிடையாது; இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் சொல்கிறார் !! 2

இரு அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி, நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடத்தது. இதில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை சும்மா பிரித்து மேய்ந்த இங்கிலாந்து அணி, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து உலகசாதனை (481/6,) படைத்தது.

இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் கூறுகையில்,‘இங்கிலாந்து அணி வீரர்களுக்கு அந்த வானமே எல்லை. எப்படியும் 500 ரன்களை கடந்துவிடுவோம் என நினைத்தேன். ஆனால் அது தற்போது முடியாமல் போனது.

எங்களுக்கு எல்லையே கிடையாது; இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் சொல்கிறார் !! 3

இங்கிலாந்து அணி வீரர்களின் ஆட்டம் சூறாவளி மாதிரி இருந்தது. இதே ஆட்டம் தொடர்ந்தால், 500 ரன்களை எட்டும் நாளும் தூரத்தில் இல்லை. அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் கோப்பை வெல்வதே தற்போது இங்கிலாந்து அணியின் முதல் இலக்கு.’ என்றார்.

அசிங்கப்படும் ஆஸ்திரேலியா;

கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த அணி ஆஸ்திரேலியா. ஒருநாள் போட்டியில் 1999, 2003 மற்றும் 2007-ல் தொடர்ச்சியாக மூன்று முறை உலகக்கோப்பையை கைப்பற்றி சரித்திர சாதனைப் படைத்தது. ரிக்கி பாண்டிங், கில்கிறிஸ்ட், வார்னே, மெக்ராத் ஆகியோர் ஓய்வு பெற்ற பின்னர், அந்த அணி தனித்தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வந்தது.

எங்களுக்கு எல்லையே கிடையாது; இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் சொல்கிறார் !! 4

தற்போது முற்றிலும் துவண்டுவிட்டது. சுமார் 30 வருடத்திற்குப் பிறகு ஐசிசி தரவரிசையில் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது. நேற்று நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டம் வாழ்நாளில் மறக்க முடியாத போட்டியாக அமைந்துவிட்டது. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 481 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *