இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிளான தொடரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி, கேரளாவின் திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
மழையால் 1 மணி நேரம் பாதிக்கப்பட்ட போட்டி பின்னர் மழை நின்றவுடன் ஆரம்பித்தது. மழையால் ஆட்ட நேரம் வீணானதால், ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் நேர்த்தியாக ஃபீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்கார்களாக வழக்கமாக சிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர்.
துவக்க முதலே நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌத்தி ஸ்லோவர் பந்துகளாக வீசி இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தை தடுத்தனர்.
2ஆவது ஓவரில் அடுத்தடுத்து சிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை தனது ஸ்லோவர் பந்துகளுக்கு இறையாக்கினார் டிம் சௌத்தி. அதன் பின்னர் கேப்டன் கோலி ஆடுகளத்திற்குள் வந்து தனது வழக்கமான் அதிரடியைத் துவங்கினார். 6 பந்துகளுக்கு 13 ரன் அடித்து ஆட்டமிழந்தார்.
அதன் பின் வந்த ஸ்ரெயஸ் ஐயரும் சற்று சொதப்பி வெளியேறினார். பின்னர் வந்த மணீஷ் பாண்டே அதிரடியாக ஆடி ரன் சேர்க்க துவங்கினார். துவக்க முதலே நியூசிலாந்து வீரர்கள் நன்றாக பந்து வீசியது மட்டுமில்லாமல் ஃபீல்டிங்கிலும் அசத்தலாக செயல்பட்டனர்.
கடைசி ஓவரின் 2ஆவது பந்தை அழகாக பிக் செய்து தூக்கி சிக்சருக்கு அடித்தார் மணீஷ் பாண்டே. அந்த பந்து மிட் விக்கெட் திசையில் சிக்சருக்கு பறந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் லாங் ஆனில் சற்று தள்ளி நின்றிருந்த சான்ட்னரும், டீப் மிட் விக்கெட்டில் ஃபீல்டிங்கில் நின்றிருந்த காலின் டீ கிராந்ஹோமும் பந்தை எல்லையில் பிடிக்க் ஓடி வந்தனர், சற்றும் எதிர்பாராத விதமாக ஓடி வந்த சான்ட்னர் பவுண்டரில் லைனில் ஒரு செம்ம டைட் அடித்து பறக்க பறக்க பிடித்து அந்தரத்திலேயே பக்கத்தில் ஓடி வந்த காலின் டீ கிராட்ஹோமிடம் வீசிவிட்டர் சான்ட்னர். பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருந்தது இந்த கேட்ச்.
அந்த கேட்சின் வீடியோ கீழே :
https://twitter.com/84107010ghwj/status/927942636995883008