அந்த சின்ன பையன் எப்பவும் ஏதாச்சும் புதுசு புதுசா பண்றான்; இளம் வீரரை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் !! 1

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் குறித்து பாராட்டி பேசியுள்ளார்

இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது மோசமான பந்து வீச்சால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், தன்னை விமர்சித்தவர்களே பாராட்டும் வகையில் அடுத்தடுத்த போட்டிகளில் கம்பேக் கொடுத்து அசத்தினார்.

அந்த சின்ன பையன் எப்பவும் ஏதாச்சும் புதுசு புதுசா பண்றான்; இளம் வீரரை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் !! 2

குறிப்பாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் மிக சிறந்த முறையில் பந்துவீசி ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

முகமது சிராஜ் பந்து வீச்சு குறித்து அப்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகம் பாராட்டியது,முகமது சிராஜ் அறிமுக வீரர் போல் இல்லாமல் சிறப்பாக செயல்படும் அனுபவ வீரர் போல் சிறந்த முறையில் விளையாடுகிறார் என்று பெரும்பாலானோர் பாராட்டினர், அதற்குப்பின் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ரெகுலர் வீரராக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டு தற்போது வரை விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் இந்திய அணியில் வளர்ந்து வரும் இளம் வீரர்களை பாராட்டியும் அறிவுரை வழங்கியும் வரும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் இளம் வீரர் முகமது சிராஜ் குறித்து பாராட்டி பேசியுள்ளார்.

அந்த சின்ன பையன் எப்பவும் ஏதாச்சும் புதுசு புதுசா பண்றான்; இளம் வீரரை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் !! 3

அதில் பேசிய அவர், சிராஜ் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு அறிமுகமாகி விளையாடினார்,ஆனால் அந்த போட்டியில் அவர் அறிமுக வீரர்போல் செயல்படாமல் அனுபவ வீரர் போல் செயல்பட்டார், அவருடைய பந்துவீச்சை பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும் மேலும் எப்பொழுதெல்லாம் நான் அவரை பார்க்கிறோம் அப்பொழுதெல்லாம் புதிதாக ஏதாவது ஒன்றை அவர் அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பார்.

அவர் பந்து வீசுவதற்காக ஓடி வருவதைப் பார்க்கும் பொழுது காலில் ஸ்பிரிங் வைத்தது போல் செயல்படுவார், மேலும் அவர் முதல் ஓவர் வீசுகிறாரா அல்லது இறுதி ஓவர் வீசுகிறாரா என்பது கணிக்க முடியாது அந்த அளவிற்கு மிகவும் புத்துணர்வுடன் எப்பொழுதுமே பந்து வீசுவார், சிராஜ் ஒரு தகுதியான சிறந்த வேகப்பந்து வீச்சாளர், சிராஜ் வேகமாகக் கற்றுக் கொள்ளக் கூடிய திறமை படைத்தவர் என்றும் சிராஜை சச்சின் பாராட்டிப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *