தோனிக்காக இந்த வருஷம் கப் அடிச்சு கொடுப்போம்ங்க.... சிஎஸ்கே வீரர்களே என்கிட்ட வந்து சொன்னாங்க - சுரேஷ் ரெய்னா சொன்ன சீக்ரெட்! 1

ருத்துராஜ் கெய்க்வாட் என்னிடம் வந்து, இந்த வருடம் தோனிக்காக கோப்பையை கட்டாயம் பெற்றுத் தருவோம் என்றார். மற்ற சிஎஸ்கே வீரர்களும் என்னிடம் சொன்னது இதுதான் என்று தனது சமீபத்திய பேட்டியில் சிஎஸ்கே அணியில் பேசிக்கொண்டதை கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் முடிவில் 17 புள்ளிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் இரண்டாம் இடத்தில் முடித்தது. இதனால் முதலிடம் பிடித்த குஜராத் அணிக்கு எதிராக முதல் குவாலிஃபயர் போட்டியிலும் விளையாடியது.

தோனிக்காக இந்த வருஷம் கப் அடிச்சு கொடுப்போம்ங்க.... சிஎஸ்கே வீரர்களே என்கிட்ட வந்து சொன்னாங்க - சுரேஷ் ரெய்னா சொன்ன சீக்ரெட்! 2

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 172 ரன்கள் அடித்தது. இந்த இலக்கை செய்த குஜராத் அணியை 157 ரன்களுக்குள் சுருட்டி 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணி வெற்றிபெற்று இந்த சீசனின் பைனலுக்கு முதல் அணியாகவும் முன்னேறியது.

சிஎஸ்கே அணி பத்தாவது முறையாக ஐபிஎல் பைனலுக்கு முன்னேறியுள்ளது. வேறு எந்த அணியும் இத்தனை முறை பைனலுக்கு முன்னேறியது இல்லை. இந்த வகையிலும் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே இருந்து வருகிறது.

தோனிக்காக இந்த வருஷம் கப் அடிச்சு கொடுப்போம்ங்க.... சிஎஸ்கே வீரர்களே என்கிட்ட வந்து சொன்னாங்க - சுரேஷ் ரெய்னா சொன்ன சீக்ரெட்! 3

இது குறித்து தொலைக்காட்சியில் வர்ணனையாளராக இருந்து வரும் முன்னாள் சிஎஸ்கே ஜாம்பவான் சுரேஷ் ரைனா கூறுகையில்,

“14 சீசன்களில் 10 முறை பைனல். தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி மிகப்பெரிய சாதனையை செய்து முடித்திருக்கிறது. அத்தனை பாராட்டுகளும் தோனிக்கு செல்ல வேண்டும். நான் ருத்துராஜிடம் பேசியபோது, ‘சிஎஸ்கே அணி இம்முறை தோனிக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்று இருக்கிறார்கள்.’ என தெரிவித்தார். ஒட்டுமொத்த இந்தியாவும் தோனி ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று காத்திருக்கிறது.

தோனிக்காக இந்த வருஷம் கப் அடிச்சு கொடுப்போம்ங்க.... சிஎஸ்கே வீரர்களே என்கிட்ட வந்து சொன்னாங்க - சுரேஷ் ரெய்னா சொன்ன சீக்ரெட்! 4

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என்பதை மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளார்கள். இது அவர்களை கோட்டையாக பல வருடங்களாக இருக்கிறது.  தோனி தொட்டதெல்லாம் தங்கமாக மாறியது. நிக்க வைக்கும் இடமெல்லாம் கேட்ச்கள் கரெக்ட்டாக சென்றது. பீல்டர்கள் துளியும் நகரவில்லை. அதுதான் மகேந்திர சிங் தோனி.” என்றார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *