விராட் கோலி

இந்திய அணியின் முன்னாள் தலைமை தேர்வாளர் சபா கரீம் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து வலுவான இந்திய அணியை கட்டமைக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

அடுத்தடுத்த நெருக்கடியை சந்தித்து வந்த விராட் கோலி தனக்கு எந்த ஒரு கேப்டன் பதவியும் வேண்டாம் என்று மூன்று விதமான கேப்டன் பதவியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தற்பொழுது (Pure Batsmen) பேட்ஸ்மேனாக மட்டும் இந்திய அணியில் தொடருகிறார்.

இந்திய அணியின் எதிர்காலம் இந்த இருவர் கையில் தான் உள்ளது; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 1

இந்த நிலையில் எந்த ஒரு நெருக்கடியும் இல்லாமல் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இதானல் ரோகித் சர்மா தலைமையின்கீழ் விராட் கோலி எப்படி செயல்படுவது என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

என்னதான் விராட் கோலி கேப்டன் பதவியை ராஜினாமா செய்தாலும் விராட் கோலியின் தலைமை பண்பு இன்னும் அவரிடம் இருக்கிறது, இதன் காரணமாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கோலி உறுதுணையாக இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இந்திய அணியின் எதிர்காலம் இந்த இருவர் கையில் தான் உள்ளது; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 2

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் தலைமைத் தேர்வாளர் சபா கரீம் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகிய இருவரும் சேர்ந்து வலுவான இந்திய அணியை உருவாக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், எதிர்கால இந்திய அணியை வலுவாக கட்டமைக்க வேண்டுமென்றால் அதற்கு தற்போதுள்ள சீனியர் வீரர்கள் இளம் வீரர்களை பயிற்றுவிக்க வேண்டும், இந்திய அணியில் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு இளம் வீரரை பயிற்றுவித்து அவர்களை தலைமைத்துவம் பெறுவதற்கு இந்திய அணியின் சீனியர் வீரர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்,குறிப்பாக (Spin Department)சுழற்பந்துவீச்சில் இந்திய ஒருவரை தலைவராக்க வேண்டும்,தற்பொழுது இந்திய அணியில் கோர் வீரர்கள் வலுவாக இருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கையை இந்திய அணி செய்ய வேண்டும், குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட்கோலி ஆகிய இருவரும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு உறுதுணையாக இருந்து இளம் வீரர்களை முன்னேற்றுவதற்கான உதவிகளை செய்யவேண்டும் என்று சபா கரீம் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *