இவர் எங்களுக்கு தேவையே இல்லை; போர்க்கொடி தூக்கும் இந்திய வீரர்கள்..? 1

இவர் எங்களுக்கு தேவையே இல்லை; போர்க்கொடி தூக்கும் இந்திய வீரர்கள்..?

நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வியை தொடந்து இந்திய வீரர்கள் பலர் ரவி சாஸ்திரி மீது கடுப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து இந்திய அணி பல்வேறு விமர்ச்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் இது தான் என முன்னாள் , இந்நாள் வீரர்கள் என பலரும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர், அதே போல் பலர் இந்திய அணி செய்த தவறுகளையும் சுட்டி காட்டி வருகின்றனர்.

இவர் எங்களுக்கு தேவையே இல்லை; போர்க்கொடி தூக்கும் இந்திய வீரர்கள்..? 2

இது ஒரு புறம் இருக்க இந்திய அணியின் வீரர்கள் மத்தியிலும் குழப்பம் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு ரவி சாஸ்திரியின் தவறான முடிவுகள் தான் காரணம் என்ற பரவலாக பேசப்பட்டு வரும் குற்றச்சாட்டையே இந்திய வீரர்கள் பலரும் பேசி வருவதாக தெரிகிறது.

இவர் எங்களுக்கு தேவையே இல்லை; போர்க்கொடி தூக்கும் இந்திய வீரர்கள்..? 3

விராட் கோஹ்லி உள்பட சீனியர் வீரர்கள் யாரிடமும் கலந்தாலோசிக்காமல் ரவி சாஸ்திரி தன்னிச்சையாக எடுத்த முடிவுகளே இந்திய அணியின் இந்த நிலைமைக்கு காரணம் என்பதே அவர்களின் குற்றச்சாட்டாக இருக்கலாம் என தெரிகிறது. இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் பட்சத்தில் ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

விசாரணை வளையத்திற்குள் ரவி சாஸ்திரி ;

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோஹ்லி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் உலகக்கோப்பை தோல்வி குறித்து ஆலோசிக்கப்படும் என அவர் கூறினார். எனினும் ஆய்வுக்கூட்டம் எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியாகவில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *