தோனி,விராட் கோலி, சப்ராஸ் அஹ்மத் யார் யார் எப்படி?? போட்டுடைத்த டூப்லஸ்ஸிஸ் !! 1

சவுத் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டூ பிளேஸிஸ் உலகின் தலைசிறந்த கேப்டனும் எம்எஸ் தோனி விராட் கோலி மற்றும் சப்ராஸ் அகமது பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சவுத்ஆப்பிரிக்கா அணியைச் சேர்ந்த டுப்லஸ்ஸிஸ் பல முறை சிறப்பாக செயல்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பலமுறை வெற்றியைத் தேடித் தந்துள்ளார், வேணும் சமீபமாக நடந்த 2021 ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 4 அரை சதங்கள் அடித்து மிகப்பெரும் சாதனை படைத்தார்.7 போட்டிகளில் விளையாடி 322 அடித்து சென்னை அணிக்கு மிகப்பெரும் அஸ்திவாரம் அமைத்து சென்னை அணியை வெற்றி பெறச் செய்துள்ளார் இந்நிலையில் அச்சத்தின் காரணமாக ஐபிஎல் போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டது.

தோனி,விராட் கோலி, சப்ராஸ் அஹ்மத் யார் யார் எப்படி?? போட்டுடைத்த டூப்லஸ்ஸிஸ் !! 2

இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் குவெட்டா கிளாடியேட்டர் அணிக்கு விளையாட உள்ளார். மேலும் அந்த அணியின் கேப்டனாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது உள்ளார். இந்நிலையில் சவுத்ஆப்பிரிக்கா அணியின் வீரர் டு பிளேசிஸ் எம்எஸ் தோனி விராட் கோலி மற்றும் சப்ராஸ் அகமது குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி ஒரு மிகச் சிறந்த கேப்டன், இவர் அணியை வழி நடத்துவதில் மற்றும் வீரர்களை மிகச்சிறப்பாக கையாள்வார், மேலும் மிகவும் அமைதியானவர் மற்றும் ஃபீல்டர்களை சரியாக பயன்படுத்துவதில் வல்லவர் என்று தெரிவித்தார், ஆனால் சப்ராஸ் அகமது மற்றும் விராட்கோலி ஆகிய இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இவர்கள் வீரர்கள் இடத்தில் அதிகமாக பேசுவார்கள் குறிப்பாக பந்துவீச்சாளர்களிடத்தில் அதிகமாக பேசி அவர்களை உற்சாகப் படுத்திவார்கள் என்று தெரிவித்தார்,மேலும் தனது கேப்டன்ஷிப் பற்றி அதிகமாக சந்திப்பவர்கள் ஆக இருவரும் என்று தெரிவித்தார்.

தோனி,விராட் கோலி, சப்ராஸ் அஹ்மத் யார் யார் எப்படி?? போட்டுடைத்த டூப்லஸ்ஸிஸ் !! 3

மேலும் அவர் தெரிவித்ததாவது, உலகின் தலைசிறந்த கேப்டன்ஷிப் கீழ் விளையாடுவது எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது, இதனால் அவர்கள் எவ்வாறு சிந்திப்பார்கள் என்று என்பதை என்னால் உணர முடிகிறது என்று தெரிவித்தார்.டுப்லஸ்ஸிஸ் சவுத்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக செயல்பட்டு மூன்று விதமான தொடர்களிலும் பல வெற்றிகளை தேடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *