நேற்று நடந்த பாகிஸ்தான் லீக் தொடரில் க்வெட்டா கிளாடியேட்டர் மற்றும் பேஷாவர் ஜல்மி அணிகள் மோதியது. அந்த போட்டியில் பீல்டிங் செய்ய முயற்சி செய்தபோது ஃபேப் டு பிளேசிஸ் தனது சக அணி வீரர் முகமது ஹஸ்னைன் உடன் ஏற்பட்ட எதிர்பாராத விதமான மோதலால் காயமடைந்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது அனைத்து ரசிகர்களையும் வருத்தமடைய செய்துள்ளது.
முதலில் டாஸ் வென்று கிளாடியேட்டர்ஸ் அணி பீல்டிங் செய்தது. பெஷாவர் அணியில் விளையாடிய கம்ரன் அக்மல் 37 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து டேவிட் மில்லர் 46 பந்துகளில் 63 ரன்கள் குவித்து அசத்திய இறுதியில் அந்த அணி 20 ஓவர் முடிவில் 197 ரன்கள் குவித்தது.
எதிர்பாராவிதமாக காயமடைந்த ஃபேப் டு பிளேசிஸ்
இந்த ஆட்டம் நடைபெற்ற வேளையில் தான் ஃபேப் டு பிளேசிஸ் காயமடைந்தார். ஆட்டத்தில் ஏழாவது ஓவரில் பந்தை தடுக்க முயற்சி செய்த டுப்லஸ்ஸிஸ் முகம்மது ஹஸ்னைன் மீது மோதிக் கொண்டார். இதனால் அவருக்கு மிகப் பெரிய காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தற்பொழுது சிகிச்சை பெற்றுவரும் டு பிளசிஸ் கூடிய விரைவில் பூரண குணமடைந்து வர வேண்டும் என்று பிரார்த்தனை நிறைந்த பதிவுகளை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
67 ரன்கள் வித்தியாசத்தில் பேஷாவர் ஜல்மி அணி வெற்றி
198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சர்பராஸ் கான் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பேஷாவர் ஜல்மி அணியில் மிக சிறப்பாக பந்து வீசிய வகாப் ரியாஸ் மற்றும் உமைது ஆசிப் 2 விக்கெட்டுகளையும், முகமது இர்பான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய அசத்தினார்கள். இதன் காரணமாக 67 ரன்கள் வித்தியாசத்தில் பேஷாவர் ஜல்மி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு பேச ஒரு அணியும் முன்னேறியுள்ளது. மறுபக்கம் கிளாடியேட்டர்ஸ் அணி 6 தோல்விகள் உடன் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.