கடந்த சனிக்கிழமை அன்று பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பேஷாவர் ஜல்மி மற்றும் க்வெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி மோதிக்கொண்டன. ஆட்டத்தில் முதலில் கிளாடியேட்டர்ஸ் அணி பேட்டிங் விளையாடியது. அப்பொழுது ஏழாவது ஓவரில் பந்தை தடுக்க முயற்சி செய்த டுப்லஸ்ஸிஸ் முகம்மது ஹஸ்னைன் மீது மோதிக் கொண்டார்.
தலையில் சற்று பலத்த காயத்துடன் அவர் சில நிமிடங்கள் சுயநினைவை இழந்தார். பின்னர் அவரை மருத்துவ குழுவின் உதவியோடு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டு பிளசிஸ் தற்போது தனது ட்விட்டர் வலைதளத்தில் உடல் நலம் குறித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
சற்று ஞாபகமறதி நிலைக்கு சென்றுவிட்டேன்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டுப்லஸ்ஸிஸ் தனது ட்விட்டர் பதிவில், எனக்காக வேண்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றி. நான் தற்பொழுது நலமாக இருக்கிறேன். தலையில் ஏற்பட்ட அடியின் காரணமாக சற்று ஞாபகம் மறதி நிலைக்கு சென்றுவிட்டேன்.
இருப்பினும் இன்னும் சில தினங்களில் நான் கூடிய விரைவில் பழைய நிலைக்கு திரும்பி விடுவேன். கூடிய விரைவில் மீண்டும் வந்து விளையாடுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இறுதியாக உங்கள் அன்பு எப்பொழுதும் எனக்கு இருப்பது போல என்னுடைய அன்பு உங்களுக்காக எப்பொழுதும் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
கிளாடியேட்டர்ஸ் அணியில் இடம் டுப்லஸ்ஸிஸ் தற்பொழுது விளையாட முடியாத நிலையில் வேறு ஒரு வீரரை வைத்து விளையாட அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 19 வயதான பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர் சைம் அயூப் தற்பொழுது டு பிளசிஸ் விளையாடும் வரை அவரது இடத்தில் விளையாடுவார் என்று அறிவித்துள்ளது.
புள்ளி பட்டியலில் கிளாடியேட்டர்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 6 தோல்விகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் இஸ்லாமாபாத் அணியும் 2வது இடத்தில் லாகூர் அணியும், மூன்றாவது இடத்தில் பேஷாவர் அணியும், நாலாவது இடத்தில் கராச்சி அணியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.