போடுங்கடா வெடிய... சிஎஸ்கே வாங்கியுள்ள புதிய அணிக்கு கேப்டனாகும் பாப் டு பிளசிஸ்! அடுத்த சீசன் சிஎஸ்கே அணிக்கும் எடுக்க திட்டமா? 1

அமெரிக்காவில் நடக்க உள்ள கிரிக்கெட் லீகில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எடுக்கப்பட்ட பாப் டு பிளசிஸ், அணியின் கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார் எனும் அறிவிப்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

உலகெங்கிலும் டி20 மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன் பிரதிபலனாக பல்வேறு நாடுகள் டி20 லீக் போட்டிகளை எடுத்து நடத்தி வருகின்றன.

இந்தியாவில் 2008ஆம் ஆண்டிலிருந்து பிரிமியர் லீக் டி20 தொடர் பிரபலமாக இருந்து வருகிறது. அனைத்து டி20 லீக் போட்டிகளுக்கும் இதுதான் தலையாய தொடராகவும் இருக்கிறது.

போடுங்கடா வெடிய... சிஎஸ்கே வாங்கியுள்ள புதிய அணிக்கு கேப்டனாகும் பாப் டு பிளசிஸ்! அடுத்த சீசன் சிஎஸ்கே அணிக்கும் எடுக்க திட்டமா? 2

ஆஸ்திரேலியாவிலும் பல வருடங்களாக பிக் பாஸ் டி20 லீக் தொடர் பிரபலமாக நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக், பங்களாதேஷில் பங்களாதேஷ் பிரீமியர் லீக், இலங்கையில் ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் என கிரிக்கெட் பிரபலமாக இருக்கும் நாடுகளில் டி20 லீக் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வருடம் புதிதாக தென்னாப்பிரிக்காவிலும் தென் ஆப்பிரிக்கா டி20 லீக் அறிமுகமாகியுள்ளது. முதல் சீசன் நடந்து முடிந்திருக்கிறது.

இந்த நாடுகளை தாண்டி உலகின் பல்வேறு நாடுகளிலும் டி20 லீக் தொடரை பிரபலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள கிரிக்கெட் வாரியம் அங்கே டி20 லீக் போட்டிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்து அறிவிப்புகள் வெளியிட்டது.

போடுங்கடா வெடிய... சிஎஸ்கே வாங்கியுள்ள புதிய அணிக்கு கேப்டனாகும் பாப் டு பிளசிஸ்! அடுத்த சீசன் சிஎஸ்கே அணிக்கும் எடுக்க திட்டமா? 3

அதன்படி இந்திய பிரிமியர் லீகில் பங்கேற்று விளையாடி வரும் அணிகளின் உரிமையாளர்கள் அமெரிக்காவில் உள்ள மாகாணங்களின் பெயரில் பல்வேறு அணிகளை வாங்கியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெக்சாஸ் மாகாணத்தின் அணியை வாங்கி, அதற்கு டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் எனும் பெயரையும் வைத்துள்ளது.

நேற்றைய தினம் டெக்சாஸ் அணிக்கு அம்பத்தி ராயுடு, பிராவோ, டெவான் கான்வே, மிச்சல் சான்டனர் உள்ளிட்ட சிஎஸ்கே பிரபலங்கள் எடுக்கப்பட்டனர். அதன் பிறகு டேவிட் மில்லர், டேனியல் சாம்ஸ் உட்பட மாற்ற வீரர்களும், பாகிஸ்தானை சேர்ந்த இருவரும் டெக்சாஸ் அணிக்கு எடுக்கப்பட்டு இருக்கின்றனர்.

போடுங்கடா வெடிய... சிஎஸ்கே வாங்கியுள்ள புதிய அணிக்கு கேப்டனாகும் பாப் டு பிளசிஸ்! அடுத்த சீசன் சிஎஸ்கே அணிக்கும் எடுக்க திட்டமா? 4

சிஎஸ்கே அணி தென்னாபிரிக்கா டி20 லீகில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என்னும் அணியை வைத்திருக்கிறது. அதற்கு கேப்டனாக பாப் டூ ப்ளசிஸ் இருக்கிறார். தற்போது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பாப் டூ ப்ளசிஸ் எடுக்கப்பட்டு கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதனை அணை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

போடுங்கடா வெடிய... சிஎஸ்கே வாங்கியுள்ள புதிய அணிக்கு கேப்டனாகும் பாப் டு பிளசிஸ்! அடுத்த சீசன் சிஎஸ்கே அணிக்கும் எடுக்க திட்டமா? 5

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *