தனி ஆளாக தீவிர பயிற்சி எடுத்த தல தோனி !! 1
தனி ஆளாக தீவிர பயிற்சி எடுத்த தல தோனி

இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி இடம்பெற்றுள்ளார்.

இதில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கான ஃபிட்னஸ் தொடர்பான யோ யோ தேர்வு ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பங்கேற்றது. 2 தினங்களுக்குள்ளாக இந்திய அணி இதில் வெற்றிபெற்றது.

தனி ஆளாக தீவிர பயிற்சி எடுத்த தல தோனி !! 2
Dhoni, who took the YoYo test on June 15 with other limited overs specialists, had stayed back and perhaps waited for the hullabaloo around the team to die down before taking the field.

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் தோனி மட்டும் தனிமையில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதர வீரர்கள் அனைவரும் இல்லாத நிலையில், அவருக்கு உதவியாக வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் மட்டும் பந்துவீசி வருகிறார். மேலும் அங்குள்ள த்ரோ டௌன் ஸ்பெஷலிஸ்ட் ரகு உடனிருக்கிறார்.

தனி ஆளாக தீவிர பயிற்சி எடுத்த தல தோனி !! 3
Cuttack: Indian Captain M.S.Dhoni during the training session prior to the 2nd T20 Match against India at Barabati Stadium in Cuttack on Sunday. PTI Photo by Swapan Mahapatra(PTI10_4_2015_000142A)

உலகளவில் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழும் தோனியின் இந்த கடும் பயிற்சி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து சிறப்பான ஆட்டத்திறனுடனேயே தோனி திகழ்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *