சர்வதேச கிரிக்கெட்டில் வீசப்பட்ட 10 வேகமான பந்துகள்: கிரிக்கெட்டில் வேகப்பந்துகளை பார்ப்பது தான் ரசிகர்களுக்கு பிடிக்கும். பந்துவீச்சாளர்கள் வேகமாக ஓடி வந்து, அசத்தலாக எகிறி அந்த பந்தை அதிவேகமாக வீசும் போது, எதிரே விளையாடி கொண்டிருக்கும் வீரர் அந்த பந்தை எப்படி சமாளிக்கலாம் என்று நினைப்பார்.
பிரெட் ஸ்போபோர்த், பிரெட் ட்ரூமேன், வெய்ன் டேனியல், சார் வெஸ் ஹால், ஆல்பர்ட் ட்ரோட் போன்ற வேகமாக வீச கூடிய பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். ஆனால், அவர்கள் இருந்த போது பந்துவீச்சின் வேகத்தை கணிக்கும் இயந்திரங்கள் இல்லை. ஆனால், தற்போது பந்துவீச்சின் வேகத்தை அளக்கமுடிகிறது, இதனால் கிரிக்கெட்டில் அதிவேகமாக வீச கூடிய பந்துவீச்சாளர்கள் யார் என கண்டு பிடிக்கலாம்.
சர்வதேச கிரிக்கெட்டில் வீசப்பட்ட 10 வேகமான பந்துகளை இப்போது பார்க்கலாம்:
டேல் ஸ்டெய்ன் மற்றும் லசித் மலிங்கா – 155.7 கிமீ
உலகத்திலேயே சிறந்த வேகமான பந்துவீச்சாளர்களில் தென்னாப்ரிக்காவை சேர்ந்த டேல் ஸ்டெய்னும் ஒருவர். அதிவேகமாக வீசும் அவர் ஸ்விங், யார்கர் என அனைத்து விதமான பந்துகளையும் வீசி எதிரணியின் வீரர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார். நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியின் போது அவர் 155.7 கிமீ வேகத்தில் வீசினார்.
தனது வித்தியாசமான பந்துவீச்சு ஸ்டைலால் பந்தை வேகமாக யார்க்கர் பந்து வீசி எதிரணிக்கு அச்சத்தை ஏற்படுத்துவார். மும்பையில் நடந்த 2011 உலகக்கோப்பையில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் 155.7 கிமீ வேகத்தில் வீசினார்.