ஷேன் பாண்ட் – 156.4 கிமீ
அவரது காலத்தில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்தார் நியூஸிலாந்து அணியின் ஷேன் பாண்ட். அவரது திறமையே அதிவேகமாக வீசி ஸ்விங் மற்றும் யார்கர் பந்துகளை வீசுவது தான். இதனால், அவர் பல விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால், தொடர்ந்து காயம் ஏற்பட்டு அதில் இருந்து மீள முடியாமல் தவித்ததால், 2010ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2003 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 156.4 கிமீ வேகத்தில் வீசினார் பாண்ட்.