முகமது சமி – 156.4 கிமீ
ஷோயப் அக்தரை போலவே அதிகவேக பந்துவீசுவதில் சவால் கொடுத்த ஒரே பாகிஸ்தான் வீரர் முகமது சமி தான். அவரது திறமையே அதிவேகமாக வீசி எதிரணி வீரர்களுக்கு காயம் ஏற்படுத்துவது தான். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் எடுத்த பந்துவீச்சாளர்களில் இவரும் ஒருவர். 2003இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 156.4 கிமீ வேகத்தில் வீசினார் முகமது சமி.