ஜெப் தாம்சன் மற்றும் மிட்சல் ஸ்டார்க் – 160.4 கிமீ
1970இல் டென்னிஸ் லில்லியுடன் சேர்ந்து சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோடி என்ற பெருமையை பெற்றார்கள். ஹெல்மெட் இல்லாத போதே அவர் அதிவேகமாக வீசுவார். அது பேட்ஸ்மேனை காயப்படுத்தும் என்று தெரியும், ஆனால் அதை கண்டுகொள்ள மாட்டார். 1975இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது 160.4 கிமீ வேகத்தில் வீசினார் தாம்சன்.
அதிவேகமாக பந்துவீசுவதில் மிட்சல் ஸ்டார்க் வல்லவர் என்று கூறலாம். தனது 25வது வயதிலேயே அதிவேகமாக வீசியவர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் ஸ்டார்க். நியூஸிலாந்துக்கு எதிரான தொடரின் போது ராஸ் டெய்லர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 160.4 கிமீ வேகத்தில் வீசினார் மிட்சல் ஸ்டார்க்.