ஷான் டெய்ட் – 160.7 கிமீ
வேகப்பந்து வீச்சாளர்களிலேயே இவர் கொஞ்சம் வித்தியாசம் என்று சொல்லலாம். பொறுமையாக ஓடி வந்து அதிவேகமாக வீசுவார். தொடர்ந்து 150 கிமீ வேகத்தில் வீச கூடிய திறமை உடையவர். இதனால், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் தான் அவர் அதிகமாக விளையாடினார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு டி20 போட்டியில் 160.7 கிமீ வேகத்தில் வீசினார் டெய்ட்.