ஒருகாலத்தில் இரட்டை சதம் என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தான் அடிக்க முடியும் என்று எண்ணி கொண்டிருந்தார்கள். அதன் பிறகு 2010ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் முதல் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார் சச்சின் டெண்டுல்கர். அந்த சாதனையை 2011ஆம் ஆண்டு அவருடைய பார்ட்னர் விரேந்தர் சேவாக் பறித்தார். அதன் பிறகு ரோஹித் சர்மா, கிறிஸ் கெய்ல், மார்ட்டின் குப்தில் ஆகியோர் அடித்துவிட்டனர். ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களும் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடிக்க கனவு காண்கிறார்கள். ஆனால், ஏற்கனவே மூன்று இரட்டைசதம் அடித்துள்ளார் ரோஹித் சர்மா. இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்த வீரர்களை பார்ப்போம்:
ரோஹித் சர்மா – 156 பந்துகள் vs ஆஸ்திரேலியா
2013ஆம் ஆண்டு பெங்களுருவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் இரட்டை சதத்தை அடித்தார் ரோகித் சர்மா. 156 பந்துகளில் இரட்டை சதம் அடித்த அவர் 158 பந்தில் 209 ரன் அடித்து அவுட் ஆனார்.