பஹர் ஜமான் – 148 பந்துகள் vs ஜிம்பாப்வே, 2018
ஃபஹர் ஜமான் – 148 பந்துகள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஃபஹர் ஜமான் சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 156 பந்துகளில் 24 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 210 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார். இந்த போட்டியில் 148 பந்துகளில் 200 ரன்களை கடந்ததன் மூலம் அதிகவேகமாக இரட்டை சதம் கடந்தவர்கள் பட்டியலில் ஃபஹர் ஜமானும் இடம்பிடித்துள்ளார். இந்த ஒரே போட்டியின் மூலம் பல்வேறு சாதனைகளை தன் வசமாக்கிய ஃபஹர் ஜமான், ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.