விராட் சாதனை, அதிவேக 5000 ரன் அடித்த கேப்டன் விராட்

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டி தற்போது கான்பூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அபாரமாக ஆடினார்.

Virat Kohli captain of India takes a run during the 3rd One Day International match between India and New Zealand held at the Green Park stadium in Kanpur. 29th October 2017Photo by Prashant Bhoot / BCCI / SPORTZPICS

தற்போது இந்த போட்டியில் அடித்த சதத்தின் மூலம் பல சாதனைகளை முறியடித்துள்ளார் விராட் கோலி.  கேப்டனாக பொருப்பேற்றதலிருந்து அடுத்தடுத்து பல சாதனைகளைளைப் படைத்துவருகிறார் விராட் கோலி.

விராட் கோலி இந்தியக் கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து 8 தொடர்களை இந்திய அணிக்காக வென்றுள்ளர். மேலும், சமீபத்தில் இலங்கை அணிக்கு இந்தியா பயணம் செய்திருந்த போது 3 டெஸ்ட் 5 ஒரு நாள் மற்று 3 டி20 போட்டிகளில் ஆடியது. இதில் ஆடிய அனைத்து போட்டிகளையும் வென்றது விராட் கோலி தலைமையிளான அணி.

இது போன்று வெளிநாட்டு மண்ணில் நடந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் வென்ற முதல் இந்திய கேப்டனானார் விராட் கோலி. மேலும், 23 வருடங்களுக்குப் பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரையும் வென்று சாதனை படைத்தது இந்திய அணி.

Virat Kohli captain of India celebrates his fifty during the 3rd One Day International match between India and New Zealand held at the Green Park stadium in Kanpur. 29th October 2017 Photo by Vipin Pawar / BCCI / SPORTZPICS

தற்போது சர்வதேச அளவில்  கேப்டனாக 5000 ரன் குவித்துள்ளார் விராட் கோலி. மேலும், சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன் கடந்த முதல் கேப்டன் விராட் கோலி என்ற சாதனையையும் படைத்துள்ளார் விராட் கோலி.

சர்வதேச அரங்கில் கேப்டனாக அதிக குறைந்த போட்டிகளில் 5000 ரன் அடித்த வீரர்கள் பட்டியல் :

  1. விராட் கோலி* (இந்தியா) – 93 ஆட்டங்களில்
  2. மைக்கேல் க்ளார்க் (ஆஸி) – 109 ஆட்டங்களில்
  3. ஏபி டீ வில்லியர்ஸ் (தென்) – 110 ஆட்டங்களில்
  4. க்ரேக் சேப்பல் (ஆஸி) – 112 ஆட்டங்களில்
Virat Kohli captain of India takes a run during the 3rd One Day International match between India and New Zealand held at the Green Park stadium in Kanpur. 29th October 2017Photo by Prashant Bhoot / BCCI / SPORTZPICS

Virat Kohli captain of India celebrates his hundred during the 3rd One Day International match between India and New Zealand held at the Green Park stadium in Kanpur. 29th October 2017 Photo by Vipin Pawar / BCCI / SPORTZPICSஇந்த பட்டியளில் விராட் கோலி, பல ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களை எல்லாம் பின் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவருக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 337 ரன் குவித்துள்ளது.
இந்திய அணி தரப்பில் துணைக் கேப்டன் ரோகித் சர்மா 138 பந்துகளுக்கு 147 ரன்னும் விளாசினார். இந்த ஆட்டத்தில் 18 ஃபோர்களும் 3 சிக்சர்களும் அடங்கும். மேலும், கேப்டன் விராட் கோலி 106 பந்துகளுக்கு 113 ரன் விளாசினார். 

நியூசிலாந்து அணி தரப்பில் அனைத்து பந்து வீச்சாளர்களின் பந்துகளும் சின்னாபின்னமாக்கப்பட்டது. இறுதியாக டிம் சௌத்தி மற்றும் ஆடம் மிலின் , மிட்செல் சான்ட்னர் ஆகியோ தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Editor:

This website uses cookies.