சொந்தக்காரன், மாமன் மச்சான்னு பாத்து டீம் எடுக்காம, இந்தியாவை பார்த்து எப்படி எடுக்கணும்னு கத்துக்கோங்க - பாகிஸ்தான் தேர்வுக்குழுவை சாடிய முன்னாள் வீரர்! 1

ஒவ்வொரு இடத்திற்கும் மிகச் சரியான வீரரை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்று இந்திய அணியினரிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள் என டேனிஷ் கனேரியா பாகிஸ்தான் தேர்வுக்குழுவை சாடியுள்ளார்.

வருகிற 50-ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்காக முன்னணி நாடுகள் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகின்றனர். இந்திய அணியும் அவர்களை நன்றாக எதிர்கொண்டு சொந்த மண்ணில் வெற்றிகளை குவித்து வருகிறது.

இலங்கை அணியை 3-0 என வீழ்த்தியது. நடைபெற்று வரும் நியூசிலாந்து அணியுடனான தொடரை கைப்பற்றிவிட்டது. அடுத்ததாக ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இந்தியாவிற்கு வந்து ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. இந்திய அணி இந்த தொடர்களுக்கு சரியான வீரர்களை தேர்வு செய்து பயன்படுத்தி வருகிறது.

சொந்தக்காரன், மாமன் மச்சான்னு பாத்து டீம் எடுக்காம, இந்தியாவை பார்த்து எப்படி எடுக்கணும்னு கத்துக்கோங்க - பாகிஸ்தான் தேர்வுக்குழுவை சாடிய முன்னாள் வீரர்! 2

அதேநேரம் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணிலேயே தொடர்களை வெல்வதற்கு போராடி வருகிறது. இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரை 0-3 என பறிகொடுத்தது. அதேபோல் நியூசிலாந்து அணியுடன் நடந்த ஒருநாள் தொடரையும் 1-2 என சொந்த மண்ணில் இழந்தது.

இப்படி சொந்த மண்ணில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதற்கு காரணம் சரியான வீரர்களை தேர்வு செய்யாததும், முன்னணி வீரர்கள் காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு சரியான மாற்றுவீரர் இல்லாததும் தான் என்று தேர்வுக்குழுவை சாடியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா.

பாகிஸ்தான் அணி, ஹைடன்

“பல அணிகள் உலககோப்பையில் நன்றாக செயல்படுவதற்கு இந்திய மைதானங்களுக்கு ஏற்றவாறு விளையாடுவதற்கு தங்களது பயிற்சிகளை துவங்கிவிட்டனர். ஆனால் பாகிஸ்தான் அணி இன்னமும் சரியான பிளேயிங் லெவன் தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகிறது.

இந்திய அணியில் ரிஷப் பண்ட் போன்ற முன்னணி விக்கெட் கீப்பர் இல்லாத போது, உடனடியாக இசான் கிஷன் அணிக்குள் எடுத்துவரப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறார். கூடுதலாக கீப்பிங் செய்ய அனுபவமிக்க கேஎல் ராகுல் அணியில் இருக்கிறார். ஒரு இடத்திற்கு ஏராளமான வீரர்களை வைத்திருக்கின்றனர். உருவாக்கியும் வருகின்றனர்.

ஆனால் பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை ஒரு முன்னணி வீரர் காயமடைந்து விட்டால் மற்றொரு அந்த வீரர் அந்த இடத்தை நிரப்புவதற்கு நீண்ட காலம் ஏற்படுகிறது. சரியான வீரராகவும் இருப்பதில்லை. இந்த சிக்கலை சரி செய்ய வேண்டும். வேண்டியவர்கள், உறவினர்கள் என தெரிந்த வீரர்களையே அணிக்குள் எடுக்கின்றனர். திறமையான வீரருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அவர்களை உருவாக்க முயற்சிகளும் நடப்பது இல்லை.

சொந்தக்காரன், மாமன் மச்சான்னு பாத்து டீம் எடுக்காம, இந்தியாவை பார்த்து எப்படி எடுக்கணும்னு கத்துக்கோங்க - பாகிஸ்தான் தேர்வுக்குழுவை சாடிய முன்னாள் வீரர்! 3

எப்படி மற்றொரு வீரரை உடனடியாக உள்ள எடுத்து வருவது, அவர்களை பயன்படுத்துவது என்று இந்தியாவைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு சரியான உள்ளூர் போட்டிகள் மற்றும் போட்டிகளுக்கான கட்டமைப்பை பாகிஸ்தான் வளர்க்க வேண்டும்.” என்று அறிவுறுத்தியுள்ளார் டேனிஷ் கனேரியா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *