தோனி, கோஹ்லி இல்லை; நான் பார்த்து பயந்த ஒரே வீரர் இவர் தான்; கம்பீர் ஓபன் டாக் !! 1

தோனி, கோஹ்லி இல்லை; நான் பார்த்து பயந்த ஒரே வீரர் இவர் தான்; கம்பீர் ஓபன் டாக்

ஒரு கேப்டனாக தான் பார்த்த பயந்த வீரர் யார் என்பதை முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் ஓபனாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரின் 13வது சீசன் கடந்த 19ம் தேதி துவங்கியது.

துபாயில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 8 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. நாளுக்கு நாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் நாள்தோறும் தெரிவித்து வருகின்றனர்.

தோனி, கோஹ்லி இல்லை; நான் பார்த்து பயந்த ஒரே வீரர் இவர் தான்; கம்பீர் ஓபன் டாக் !! 2

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பஞ்சாப் அணியின் கே.எல் ராகுலை மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

இது குறித்து கம்பீர் பேசுகையில், “லெக் மற்றும் ஆஃப் ஆகிய 2 திசைகளிலும் சம அளவில் அடிக்கக்கூடிய மிகக்குறைவான பேட்ஸ்மேன்களில் கேஎல் ராகுலும் ஒருவர். ரோஹித் சர்மா 2 திசைகளிலும் அடித்து நொறுக்குவார். ரோஹித்துக்கு அடுத்து அந்த திறமை பெற்ற பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் தான். விராட் கோலி நல்ல பேட்ஸ்மேன்; ஆனால் அவர் பெரும்பாலும் லெக் திசையில் தான் அடிப்பார். நான் கேப்டனாக இருந்தபோது, நான் பாய்ந்த ஒரே பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தான். ரோஹித் சர்மாவிற்கு 5-6 திட்டங்களை வைத்திருக்க வேண்டும். கோலி, டிவில்லியர்ஸுக்கு எதிராக 2 திட்டங்கள் போதும். டிவில்லியர்ஸ் மிஸ்டர் 360 பேட்ஸ்மேனாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு எதிராக 2 திட்டங்கள் இருந்தால் போதும். ஆனால் ரோஹித்துக்கு எதிராக பலவிதமான திட்டங்களை வைத்திருக்க வேண்டும் என்று ரோஹித்தை புகழ்ந்து பேசினார் கம்பீர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *