எனக்காக இத யாராச்சும் பண்ணுங்க; ரசிகர்களின் உதவியை நாடிய சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான சச்சின் டெண்டுல்கர் தனது ரசிகர்களிடம் முக்கியமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட்டின் கடவுள் என்ற அழைக்கப்படுவருமான சச்சின் டெண்டுல்கருக்கு உலகெங்கிலும் மிகப்பெரும் ரசிகர் படையே உள்ளது.
சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்று வரை சச்சினின் பல சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ள சச்சின் டெண்டுல்கர் தற்பொழுது தனது ரசிகர்களின் உதவியை நாடியுள்ளார்.
ஆம்., தனது பழைய மாருதி 800 கார் குறித்து தகவல் கிடைத்தால் எப்பொழுது வேண்டுமானால் தன்னை தொடர்பு கொண்டு தனக்கு தெரியப்படுத்தலாம் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
முதன்முதலாக வைத்திருந்த மாருதி 800 கார் மீது சச்சினுக்கு அதிக பிரியம். தற்போது அந்த கார் அவரிடம் இல்லையாம். இந்த காரைப் பற்றி தகவல் தெரிந்தால் தனக்கு தெரியப்படுத்தவும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘என்னுடைய முதல் கார் மாருதி 800. துரதிருஷ்டவசமாக தற்போது அது என்னிடம் இல்லை. மீண்டும் அது என்னுடைய இருக்க நான் மிகவும் விரும்புகிறேன். ஆகவே, அந்த கார் குறித்த தகவல்கள் தெரிந்த நபர்கள் தொடர்பு கொள்ளலாம்.