ஆஸி, இங்கிலாந்து உட்பட.., காமன்வெல்த் கிரிக்கெட் போட்டிக்கான 7 அணிகள் அறிவிப்பு ! 1

இந்தியா, ஆஸி, இங்கிலாந்து உட்பட.., காமன்வெல்த் கிரிக்கெட் போட்டிக்கான 7 அணிகள் அறிவிப்பு ! 2022ம் ஆண்டு நடைபெறும் காமென்வெல்த் மகளீர் டி20 கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்ற அணிகளை தற்போது வெளியிட்டுள்ளனர்.

2022ம் ஆண்டு நடைபெறும் 22வது காமென்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி அடுத்தாண்டு ஜுலை முதல் ஆகஸ்ட் வரை நடைபெறவுள்ளது.

ஆஸி, இங்கிலாந்து உட்பட.., காமன்வெல்த் கிரிக்கெட் போட்டிக்கான 7 அணிகள் அறிவிப்பு ! 2

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டியில் கிரிக்கெட்டும் தற்போது சேர்க்கப்பட்டிருக்கிறது. 1998ம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற காமென்வெல்த் போட்டியில் ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

அதுவே முதல் முறையாக காமென்வெல்த்தில் கிரிக்கெட் நடத்தப்பட்டது. இதன்பிறகு நடைபெற்ற காமென்வெல்த் போட்டியில் கிரிக்கெட் நடத்தப்படவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறும் காமென்வெல்த் போட்டியில் பெண் டி20 கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.

ஆஸி, இங்கிலாந்து உட்பட.., காமன்வெல்த் கிரிக்கெட் போட்டிக்கான 7 அணிகள் அறிவிப்பு ! 3

இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் காமென்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்ற மகளிர் டி20 அணிகளை ஐசிசி மற்றும் காமென்வெல்த் இணைந்து வெளியிட்டு இருக்கின்றனர். இதில் இந்த போட்டியை இங்கிலாந்து நடத்துவதால் இங்கிலாந்து அணி நேரடியாக தகுதி பெற்றுவிட்டது.

இதையடுத்து ஐசிசியினா தரவரிசையின் படி ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் மண்டலத்தில் இருந்து ஒரு அணி தகுதி பெறும். மீதமுள்ள ஒரு அணி அடுத்தாண்டு ஜனவரியில் நடைபெறும் தகுதிச் சுற்றின் மூலம் இடம்பெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

ஆஸி, இங்கிலாந்து உட்பட.., காமன்வெல்த் கிரிக்கெட் போட்டிக்கான 7 அணிகள் அறிவிப்பு ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *