பிரேசில் – இங்கிலாந்து அரையிறுதி கவுகாத்தியில் இருந்து கொல்கத்தாவிற்கு மாற்றம்

U-17 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் U-17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது வரை காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்துள்ளது. போட்டிகளில் நடைபெறுவதில் கவுகாத்தி இந்திரா காந்தி அத்லெடிக் மைதானமும் ஒன்று.

இந்த மைதானத்தில் மாலி – கானா அணிகள் மோதின. அப்போது மழை பெய்தது. இதனால் மைதான தரை மிகவும் மோசமானது. மாலி அணி சிறப்பாக விளையாடினாலும், கானா அணியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதனால் ஆட்டம் முடிந்த பின்னர் புகார் அளித்தனர்.

இந்நிலையில் நாளைமறுநாள் இங்கிலாந்து – பிரேசில் அணிகள் இந்த மைதானத்தில் அரையிறுதி போட்டியில் விளையாட இருந்தது. ஆனால் பிரேசில் அணி மைதானம் குறித்து புகார் அளித்தது. இதனால் போட்டி கொல்கத்தாவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.