உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறிய ஜெர்மனி; அப்ரிடி எமோசனல் !! 1
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறிய ஜெர்மனி; அப்ரிடி எமோசனல்

கால்பந்து உலகக்கோப்பையில் ஜெர்மனி தொடக்க சுற்றோடு வெளியேறியது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி எமோசனலாக டுவிட் செய்துள்ளார்.

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை ஜூரம் ரசிகர்களை மட்டும் ஆட்டிப்படைக்கவில்லை. மற்ற விளையாட்டுத்துறையில் சாதித்த மற்றும் சாதிக்கும் அணிகளையும் ஆட்டிப்படைத்து வருகிறது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறிய ஜெர்மனி; அப்ரிடி எமோசனல் !! 2

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஷாகிப் அப்ரிடி. இவருக்கு பிடித்தமான அணி ஜெர்மனி. நடப்பு சாம்பியனான ஜெர்மனி நேற்று 0-2 எனத் தோல்வியை தழுவி தொடக்க சுற்றோடு வெளியேறியது. இது ஜெர்மனி ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜெர்மனி தோல்வி அப்ரிடியையும் அப்செட் ஆக்கியுள்ளது. 1938-ம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக ஜெர்மனி தொடக்க சுற்றோடு வெளியேறி மோசமான சாதனைக்குள்ளாகியுள்ளது.

ஜெர்மனி தோல்வி குறித்து ஒருவர் பதிவு செய்திருந்த டுவிட்டிற்கு, அப்ரிடி பதில் அளிக்கையில் ‘‘சாம்பியன்ஸ் எப்போதும் தோற்பதில்லை, புரோ. அவர்கள் கொஞ்சம் ஓய்வு எடுத்துள்ளார்கள். அடுத்த முறை வலுவான அணியாக திரும்பி வருவார்கள். ஆனால், ஜெர்மனி அணி அதன் ரசிகர்களை இழந்ததுதான் ஏமாற்றம் அளிக்கிறது. தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொரியாவிற்கு வாழ்த்துக்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *