பிரீமியர் லீக் டி20 தொடருக்கான புதிய அட்டவணை வெளியீடு! கிரிக்கெட் வாரியம் அதிரடி! ரசிகர்கள் ஜாலி! 1

பிரீமியர் லீக் டி20 தொடருக்கான புதிய அட்டவணை வெளியீடு! கிரிக்கெட் வாரியம் அதிரடி!

கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை வெளியிட்டு ரசிகர்களை இன்ப மழையில் ஆழ்த்தியுள்ளது வாரியம்.

உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளும் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் கிரிக்கெட் வீரர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை வரலாறு காணாத அளவில் ஏற்பட்டிருக்கிறது.

பிரீமியர் லீக் டி20 தொடருக்கான புதிய அட்டவணை வெளியீடு! கிரிக்கெட் வாரியம் அதிரடி! ரசிகர்கள் ஜாலி! 2

தொடர்ந்து 3 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் இல்லாததால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வந்தனர். மார்ச் மாதம் இறுதியில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரும் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டதால் பிசிசிஐக்கு சுமார் நான்காயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை சரி செய்ய விரைவில் கிடைக்கும் இடைப்பட்ட காலத்தில் ஐபிஎல் தொடரை நடத்த தொடர்ந்து திட்டமிட்டு வருகிறது பிசிசிஐ தரப்பு.

மீண்டும் இந்தியாவில் எப்போது கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என சமீபத்தில் கங்குலி தெரிவித்தார். அவர் கூறுகையில், “தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகே, அனைத்து தொடர்களும் இயல்பு நிலைக்குத் திரும்பும்.” என்றார்.

பிரீமியர் லீக் டி20 தொடருக்கான புதிய அட்டவணை வெளியீடு! கிரிக்கெட் வாரியம் அதிரடி! ரசிகர்கள் ஜாலி! 3

இந்நிலையில் பின்லாந்து நாட்டில் வருடாவருடம் நடக்கும் உள்நாட்டு டி20 தொடருக்கான அட்டவணையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. 2 மைதானங்களில் போட்டியை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருக்கிறது. மைதானத்திற்குள் ரசிகர்களுக்கு எவ்வித அனுமதியும் இல்லை. ஆனால் ஆன்லைன் மூலம் நேரலையில் காணலாம் எனவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது.

ஜூன் 1ஆம் தேதி துவங்கி – ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை 55 லீக் போட்டிகளும், அதன்பிறகு முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

ஆகஸ்ட்  22 மற்றும் 24ஆம் தேதிகளில் குவாலிபைர் சுற்றுகள் நடைபெறுகின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *