5 பேட்டிங் சாதனைகளை கொண்டிருக்கும் பந்துவீச்சாளர்கள் 1

கிரிக்கெட் வரலாற்றில் பல அணிகளில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்புகையில் அணிக்கு பந்துவீச்சார்களின் பேட்டிங்கில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே போல் பல பந்துவீச்சாளர்களும் நிதானமாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு இட்டுச்சென்றுள்ளனர்.

அதுபோல பேட்டிங்கிலும் சாதனை படைத்த வெகு சில பந்து வீச்சாளர்களை தான் நாம் இங்கு பார்க்க இருக்கிறோம். பந்து வீச்சாளர்கள் தன் வசம் கொண்டுள்ள 5 முக்கிய சாதனைகள் இதோ..

1. ஷேன் வார்னே – ஒரு சதம் கூட அடிக்காமல் அதிக டெஸ்ட் ரன்கள்

5 பேட்டிங் சாதனைகளை கொண்டிருக்கும் பந்துவீச்சாளர்கள் 2

வார்னே வின் சுழற் பந்துவீச்சு திறமைகள் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் கீழ் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இறங்கி சில முக்கிய ஆட்டங்களை வென்று தந்துள்ளார்.

இவர் 145 டெஸ்ட் போட்டிகள் ஆடி 3,154 ரன்கள் குவித்துள்ளார். இவர் 13 அரை சதங்கள் அடித்தாலும் இதுவரை ஒரு சதம் கூட அடித்ததே இல்லை. ஒரு ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

2. அஜித் அகர்கர் – ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அதிவேக அரைசதம்.

5 பேட்டிங் சாதனைகளை கொண்டிருக்கும் பந்துவீச்சாளர்கள் 3
Harare, ZIMBABWE: India’s Ajit Agarkar plays a shoot off New Zealand’s Jacob Oram during the final of the One Day International (ODI) match, 06 September 2005. India were bowled out for 276 off 49.3 overs in the International Triangular Series One day final against New Zealand. AFP PHOTO / ALEXANDER JOE (Photo credit should read ALEXANDER JOE/AFP/Getty Images)

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் பேட்டிங் திறமை அனைவரும் அறிந்ததே. கீழ் ஆர்டரில் ஆடும் சிறந்த ஆல்ரவுண்டர் இவர். இந்திய அணிக்காக 21 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

இதுவரை இவரின் சாதனையை இந்திய வீரர்கள் யாரும் முறியடிக்கவில்லை. 2000ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்தினார்.

3. அஸ்டோன் அகர் – 11வது வீரரின் அதிகபட்ச ஸ்கோர்.

5 பேட்டிங் சாதனைகளை கொண்டிருக்கும் பந்துவீச்சாளர்கள் 4

2013 ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் போட்டியை ஆடிய ஆஸ்திரேலியா வீரர் அகர். 9 விக்கெட்டுகள் இழந்த பிறகு 11வது வீரராக களமிறங்கிய அகர் 98 ரன்கள் விளாசி தடுமாறிய அணியை நல்ல ஸ்கோர் எட்ட உதவினார்.

அதன் பிறகு, இவரது பேட்டிங் திறமை கண்டு அகர் 6வது 7வது வீரராக களமிறங்க வலியுறுத்த பட்டார்.

4. ஜேசன் கில்லெஸ்பி – நைட் வாட்ச்மன் ஆக இறங்கி அதிக ரன் அடித்தவர்.

5 பேட்டிங் சாதனைகளை கொண்டிருக்கும் பந்துவீச்சாளர்கள் 5

ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் கில்லெஸ்பி பங்களாதேஷ் அணிக்கு எதிராக நைட் வாட்ச்மன் ஆக இறங்கி அதிக ரன் விளாசினார். அந்த போட்டியில் கில்லெஸ்பி இரட்டை சதம் அடித்தார். 425 பந்துகள் ஆடிய கில்லெஸ்பி 201 ரன்கள் அடித்தார்.

5. வாசிம் அக்ரம் – ஒருநாள் போட்டியில் ஒரு சதம் கூட இல்லாமல் இரண்டாவது அதிகபட்ச ரன்கள்

5 பேட்டிங் சாதனைகளை கொண்டிருக்கும் பந்துவீச்சாளர்கள் 6
Former Pakistan cricketer Wasim Akram looks on during a practice session at the Sinhalese Sports Club (SSC) grounds in the Sri Lankan capital Colombo on December 1, 2016.
Former Pakistan cricketer Wasim Akram has begun his coaching tenure with the Sri Lankan cricket team. / AFP / Ishara S. KODIKARA (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

உலக புகழ் பெற்ற பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம். ஒருநாள் போட்டியில் ஒரு சதம் கூட அடிக்காமல் இரண்டாவது அதிகபட்ச ரன்கள் இவரது. இவர் 356 போட்டிகள் ஆடி 3,717 ரன்கள் குவித்துள்ளார். இவருக்கு முன்னால் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் மிஸ்பா உல் ஹக் உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *