இந்தியா-ஆஸ்திரேலியா இடயிளான 3ஆவது டி20 போட்டி சில நாட்களுக்கு முன்னர் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மைதானம் முழுவதும் பந்து உருண்டு செல்ல முடியாத அளவிற்கு ஈரப்பதமாக இருந்தது.
Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த நிலையல், நடந்து முடிந்த ஒருநாள் போட்டித் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இதனால், ஒருநாள் போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டி20 தொடரை கைப்பற்றியாக வேண்டும் என்ற நோக்கில் இருந்தது ஆஸ்திரேலிய அணி.
இதனையடுத்து ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், விளையாடிய ஆஸ்திரலிய அணி தோல்வியையே தழுவியது. 2-வது போட்டியில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடிய ஆஸ்திரேலியா இந்திய அணியை எளிதாக வீழ்த்தியது.
Photo by Deepak Malik / BCCI / SPORTZPICS
இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளிடையேயான கடைசி டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியத் தொடருக்குப் பின் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடவுள்ளது.
நியூசிலாந்து அணியுடன் 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி 20 போட்டிகளில் அக்டோபர் இறுதி மற்றும் நவம்பர் முதல் வாரம் விளையாடவுள்ளது. நியூசிலாந்து அணி இந்த போட்டிகளுக்காக இந்தியாவில் அக்டோபர் 22ஆம் தேதி முதல் நவம்பர் 7 ஆம் தேதி வரை சுற்றுப்ப்பயணம் மேற்கொள்ளவுள்ளது
இந்த தொடர் அக்டோபர் 22ஆம் தேதி மும்பையில் முதல் ஒருநாள் போட்டியில் துவங்குகிறது. இந்த நியூசிலாந்து தொடரில் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ள 5 இந்திய வீரர்களை தற்போது பார்ப்போம்.
5.கரன் சர்மா
லெக் ஸ்பிர்ன்னரானை வர் ஏற்க்கனவே இந்திய அணிக்காக ஆடியுள்ளார். ஆனால், சுழற்ப்பந்து வீச்சில் இந்திய அணிக்கு பஞ்சமே இல்லை என்பதால் இவரால் அணியில் இவரது இடத்தை சரியாக நிலை நிறுத்திக் கொள்ள இயலவில்லை. சமீபத்தில் நியூசிலாந்து ஏ அணி இந்தியா ஏ அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. அந்த போட்டிகளில் எல்லாம் அற்புதமாக் செயல்பட்டு விக்கெட்டுகளை கைப்பற்றியவர் கரன் சர்மா.
மேலும், அந்த நியூசிலாந்து ஏ அணியில் உள்ள 11 வீரர்களில் 7 பேர் சீனியர் நியூசிலாந்து அணியிலும் இடம் பெற்றுள்ளனர். இதனால் இவர் யோ-யோ உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி அடையும் செய்யும் பட்சத்தில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படலாம்.
4.அங்கிட் பாவ்னே
மஹாராஸ்ட்ரா அணியைச் சேர்ந்த வலது கை பேட்ஸ்மேன் ஆவார். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து அற்புதமாக செயல்பட்டு வருபவர்களில் அங்கிட் பாவ்னேவும் ஒருவர். இந்திய ஏ மற்றும் நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடயேயான ஒருநாள் போட்டியில் 270 ரன் சேசிங் செய்தது.
ஒரு கட்டத்தில் 84 ரன்னிற்கு 5 விக்கெட்டுகள் இழந்து தோல்வியயை நோக்கி சென்று கொண்டிருந்த இந்திய அணிக்கு அதிரடியாக 80 பந்துகளுக்கு 83 ரன் அடித்து போட்டியை த்ரில்லிங்காக ட்ரா செய்து கொடுத்தவர் அங்கிட் பாவ்னே. இவரும் தேர்கு செய்யப்பட வாய்ப்புகள் இருக்கிறது.
3.ரிஷப் பாண்ட்
அளப்பரிய அதிரடி திறமை இருந்தும் இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்காமல் இருந்து வருகிறார் ரிசப் பாண்ட்.
19 வயதே ஆகிறது இவருக்கு. இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதால் தோனியின் இடத்தை நிறப்ப இன்னும் கத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது இவருக்கு. தோனியின் இடத்தை இவர் நிறப்பினால் அடுத்த உலகக்கோப்பையின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர் தான்.
2.சுரேஷ் ரெய்னா
ரெய்னா உள்ளூர் போடிகளில் நன்றாக ஆடி வருகிறார். அதிக ரன் அடிக்க வில்லை என்றாலும் ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் ஃபார்மிற்கு வரும் அளவிற்கு தேவையான அளவு ரன் அடித்து வைத்திருக்கிறார் ரெய்னா.
இந்த தொடரில் எப்படியாவது அணியில் இடம் பிடித்து விட வேண்டும் என கடுமையாக உழைத்து பல வாரங்கள் ஜிம்மில் உடலை ஷேப்பாக்கி விட்டு இந்த உடல் தகுதி தேர்விற்கு வருகிறார் ரெய்னா.
சுரேஷ் ரெய்னா, இந்திய அணிக்கு கடைசியாக அழைக்கப்பட்டது நியூலாந்திற்கு எதிரான தொடரில், ஆனால் காய்ச்சல் காரணமாக அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட ஆட இயலாமல் தொடரை விட்டு வெளியேறினார். பின்னர், இங்கிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் அழைக்கப்பட்டு 3 போட்டிகளில் 104 ரன் குவித்தார். அதன் பின், ஐ.பி.எல் தொடரிலும் வழக்கம் போல் ராஜாவாக அசத்திய ரெய்னா 14 போட்டிகளில் 442 ரன் குவித்தார்.
அதன் பிறகு நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் ரெய்னா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஸ்டேண்ட்-பை லிஸ்ட்டில் தேர்வானார். பின்னர் இந்த யோ-யோ தேர்வை காரணம் காட்டி அணியில் பெயர் பரீசீலிக்கப்படவில்லை.
நியூசிலாந்து தொடருக்கு முன் மேலும் ஒரு முறை யோ-யோ உடல் தகுதி தேர்வு வைக்கப்படும் இந்த தேர்வில் 16.1 மதிப்பெண் பெறும் பட்சத்தில் ரெய்னா நியூலாந்து உடனான தொடரில் தேர்வாகி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் உலகில் கலக்கலாம்.
1.ரவிந்த்ர ஜடேஜா
ரெய்னா, யுவராஜ் சிங் போன்ற வீரர்கள் மோசமான ஃபார்மில் அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. ஆனால், ரவிந்திர ஜடேஜாவின் கதையே வேறு. இலங்கையுடனான் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் இரண்டாவது இடம் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் 2 அரைசதமும் அடித்துள்ளார். ஆனால், அக்சர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் யுஜவேந்திர சகால் ஆகியோர் ஒரு காம்பினேசனாக இந்திய அணிக்கு செயல் பட்டதாலும் இவர் காரணமே இல்லாமல் அணிக்கு வெளியே இருக்கிறார். இதற்க்காக தேர்வுக்குழு தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கமானது, வீரர்களை சுழற்ச்சி முறையில் விளையாட வைக்கவே ஜடேஜா போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்பதாகும்.
ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப் பயணத்தில் 5 ஓரு நாள் தொடரில் முதல் மூன்ரு சந்தர்பத்தினால் தேர்வு செய்யப்பட்டு பென்ச்சிலேயே உக்கார வைத்து அனுப்பட்டார். பி.சி.சி.ஐ யினால் அஷ்வின் மற்றும் ஜடேஜா, யுவ்ராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டாலும், அவர்கள் யோ-யோ உடல்தகுதி தேர்வில் தேர்வானால் தான் அணியில் மீண்டும் இடம் பிடிக்க முடியும் என சூசகமாக சொல்கிறது பி.சி.சி.ஐ.
இந்த நியூசிலாந்து தொடரில் தேர்வாக ரெய்னா மற்றும் யுவ்ராஜ் சிங்கை விட ஜடேஜாவிற்கே அதிக வாய்ப்பு இருகிறது.