1800 களின் பிற்பகுதியில் கிரிக்கெட் தொடங்கியதில் இருந்து, பல போட்டிகள் மோசமான வானிலை காரணமாக கைவிடப்பட்டன. கால்பந்து போன்ற விளையாட்டுப் போட்டியைப் போலல்லாமல், மழைக்கு முக்கியத்துவம் கொடுத்து போட்டிகள் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல தொடர்ந்தால் மழை காரணமாக போட்டிகள் முடிவுகள் இல்லாமல் நிறுத்தவும் செய்யப்பட்டுள்ளன.
மழை அல்லாமல் பனியின் ஈரப்பதம் காரணமாகவும் சில போட்டிகள் சிறிது நேரங்கள் ஒத்திவைத்த நிகழ்வுகளையும் நாம் கண்டதுண்டு. இருந்தபோதிலும், பிட்ச் சிக்கல் காரணமாகவும், கூட்டத்தின் தாக்குதல் காரணமாகவும் சில போட்டிகள் ஆடிக்கொண்டிருக்கும் போதே தடை பட்டுள்ளன. அதுபோல் சில சம்பவங்களை தான் பார்க்க இருக்கிறோம்.
- 1996 உலகக் கோப்பை அரையிறுதி, கொல்கத்தாவில் ஈடன் கார்டனில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக இந்தியா:
96ம் அசந்து உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில், இலங்கை மற்றும் இந்தியா அணிகள் கொல்கத்தா மைதானத்தில் மோதின. அதில் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்றுகொண்டு இருந்தது. அதை பொறுக்கமுடியாத ரசிகர்கள் முறைகேடான சம்பவங்களில் ஈடுபட ஆரம்பித்தனர்.
தண்ணீர் பாட்டில்களை மைதானத்திற்குள் வீசியும், நாற்காலிகளுக்கு தீ மூட்டியும் கழகத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் காம்ப்லி போட்டி முடியும் தருவாயில் அணியை அழைத்து முடித்துக்கொள்ளும்படி கூறிவிட்டு வெளியேறினார்.