3. வெஸ்ட் இண்டீஸ் Vs இங்கிலாந்து, ஆன்டிகுவாவில் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் 2009:
இது 2009 ஆம் ஆண்டில் மீண்டும் அதே இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியாகும். விவேரியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம் போட்டியில் 10 பந்துகளுக்குப் பிறகு ஆட்டம் கைவிடப்பட்டது.
மைதானத்தில் மணல் நிறைந்த வெளிப்புறம் இருப்பதாகவும், இது வீரர்களுக்கு ஆபத்தாகவும் அமையலாம் என போட்டியின் முதல் நாள் இரண்டாவது ஒவேரிலேயே, இரு அணி கேப்டன்களும் நடுவரும் கலந்துரையாடி போட்டியை முடித்துக்கொண்டனர்.
சர்வதேச கிரிக்கெட் வாரியம், வேஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்க்கு மைதானதின் தரத்தை உயர்த்துமாறு நிபந்தனை விதித்தது. அதுவரை இந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெறாது எனவும் அறிவித்தது.