- முதல் மூன்று வீரர்களை நம்பியே செயல்படுவது;
சமீபகாலமாக இந்திய அணி பெற்ற வெற்றிகளை எடுத்து பார்த்தால் அதில் இந்திய அணியின் முதல் மூன்று வீரர்களான தவான், ரோஹித் சர்மா மற்றும் கோஹ்லி ஆகியோரில் யாராவது ஒருவரின் பங்களிப்பே அதிகமானதாக இருக்கும், இன்னும் சொல்லப்போனால் அவரே அந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாகவும் திகழ்ந்திருப்பார். முதல் மூன்று வீரர்களும் ஓரிரு போட்டிகளில் சொதப்பும் பட்சத்தில் இந்திய அணி அந்த பின்னடைவில் இருந்து மீண்டு வரவே முடியாமல் கடுமையாக தவித்து வருகிறது. இதற்கு உதாரணம் இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டி.

ஆகவே, முதல் மூன்று வீரர்களை மட்டுமே நம்பி இருக்காமல் ஒவ்வொரு வீரரும் தங்களது பங்களிப்பை சரியாக செய்ய வேண்டும், அதற்கு கிரிக்கெட் நிர்வாகவும் வழிவகை செய்ய வேண்டும்.