- வேகப்பந்து வீச்சாளர்கள் பற்றாக்குறை
இந்திய அணியில் இடம்பிடிக்க அஸ்வின், ஜடேஜா, சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் என நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வரும் அதே வேளையில் மறுமுனை வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் பற்றாக்குறையே நிலவி வருகிறது.

பும்ராஹ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும் இவர்களுக்கு ஒருவேளை காயம் ஏற்படும் பட்சத்தில் இவர்கள் இருவரின் இடத்தை நிரப்பும் அளவிற்கு தகுதியான வீரர் இந்திய அணியில் உள்ளார்களா என்பது மிகப்பெரும் கேள்விக்குறியே.