- கூடுதல் பந்துவீச்சாளர்
ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா ஒரு சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் பல போட்டிகளில் கடுமையாக சொதப்பி வருகிறார். குறிப்பாக பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்கிவிடுகிறார். பேக்அப் பவுலராக இருக்கும் இவர் சொதப்புவது இந்திய அணிக்கு கூடுதல் நெருக்கடியை கொடுத்து விடுகிறது. 2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி இந்த பிரச்சனையையும் சரி செய்ய வேண்டும்.
