ஒரு ஆஸ்திரேலிய வீரருக்கு கூட இடம் இல்லை… டி.20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த பிரட் லீ
2022 டி.20 உலகக்கோப்பை தொடரில் தன்னுடைய சிறந்த ஆடும் லெவனை ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் பிரெட் லீ தேர்ந்தெடுத்துள்ளார்.
பல எதிர்பார்க்காத திருப்பங்களுடன் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடரில் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தாலும்,அனைத்து அணிகளிலும் விளையாடிய பல இளம் வீரர்கள் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மனதையும் கவர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடர் முடிவுபெற்று சில நாட்களான இந்த சமயத்தில் உலகக்கோப்பை தொடர் சம்பந்தமான கருத்துக்கள் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் வட்டத்திலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது, மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தங்களுடைய ஆடும் லெவனாக ஒவ்வொரு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்களும் அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் பிரெட் லீ, நடந்து முடிந்த 2022 டி20 உலக கோப்பை தொடருக்கான தன்னுடைய சிறந்த ஆடும் லெவனை தெரிவித்துள்ளார்.
அதில் நான்கு இந்திய வீரர், நான்கு இங்கிலாந்து வீரர்,இரண்டு பாகிஸ்தான் வீரர் மற்றும் 1 நியூசிலாந்து அணி வீரரை தேர்ந்தெடுத்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் தன்னுடைய சொந்த அணியான ஆஸ்திரேலிய அணி வீரர்களில் ஒருவரை கூட பிரெட் லீ தேர்ந்தெடுக்கவில்லை.
ஆஸ்திரேலியா அணி தன்னுடைய சொந்த மைதானத்தில் தொடரை நடத்தியும் அரை இறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறியதால்,பிரெட் லீ ஒரு வீரரை கூட தேர்ந்தெடுக்கவில்லை.
உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த பிரெட்லீ, தன்னுடைய சிறந்த ஆடும் லெவனில் நட்சத்திர துவக்க வீரர்களான ஜாஸ்பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹோல்ஸை தேர்ந்தெடுத்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து மூன்று மற்றும் நாலாவது இடத்தில் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவை தேர்ந்தெடுத்துள்ளார்.
மேலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மாங்களாக கிளென் பிலிப்ஸை தேர்ந்தெடுத்த பிரெட் லீ, தனது அணியின் ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சதாப்கான் மற்றும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சாம் கரணையும் தேர்ந்தெடுத்துள்ளார்.
இதனையடுத்து தனது அணியின் பந்து வீச்சாளர்களாக சகீன் அப்ரிடி,அர்ஷ்திப் சிங் மற்றும் ஆடில் ரஷீத் ஆகிய மூவரையும் பிரெட் லீ தேர்ந்தெடுத்துள்ளார்.
இதில், இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்திப் சிங்கை தன்னுடைய சிறந்த ஆடும் லெவனில் பிரெட் லீ தேர்ந்தெடுத்துள்ளது இந்திய ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சியை ஏற்படுத்துள்ளது.
ப்ரெட் லீ தேர்ந்தெடுத்த 2022 டி.20 கோப்பைக்கான சிறந்த ஆடும் லெவன்..
ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ்,விராட் கோலி, சூரியகுமார் யாதவ்,கிளென் பிலிப்ஸ்,சதாப் கான்,ஹர்திக் பாண்டியா,சாம் கரன்,சகீன் அப்ரிடி,அர்ஷ்திப் சிங்,ஆடில் ரஷீத்.