நீண்ட நாள் நோயால் அவதிப்பட்டமுன்னாள் பெங்கால் மற்றும் ஈஸ்ட்-சோன் வீரர் டபன் ஜோதி பேனர்ஜி மருத்துவமனையில் இறந்துவிட்டதாக, பெங்கால் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
அவரது வயது 73, அவர் பெங்கால் மகளிர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்தார்.
“சில மாதங்களுக்கு முன்பு அவரது பெருமூலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, அவர் கோமாவிற்கு சென்றார். காலை 11 மணி அளவில் நம்மை விட்டு அவர் பிரிந்தார்,” என பெங்கால் கிரிக்கெட் வாரியம் கூறியது.
கான்பூரில் பிறந்த பேனர்ஜி, பெங்கால் அணிக்காக 18 முதல்-நிலை போட்டிகள் விளையாடியுள்ளார். அவர் 217 ரன் அடித்து 47 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அவர் வலது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.
“அவர் ஒரு சிறந்த வீரர், அவர் பேட்டிங், பந்துவீச்சு அதுமட்டுமில்லாமல் பீல்டிங்கும் அற்புதமாக செய்வார்,” என பேனர்ஜியுடன் விளையாடிய ராஜு முகர்ஜி கூறினார்.
“பெங்கால் கிரிக்கெட் அணிக்காக அவர் வீரராக, பயிற்சியாளராக மற்றும் அணி தேர்வாளராக 50 வருடம் உழைத்திருக்கிறார்,” என முகர்ஜி கூறினார்.
2010-11 சீசனில் இன்டர்-சோன் தொடரில் பெங்கால் சீனியர் மகளிர் அணிக்கு பயிற்சியாளராக பேனர்ஜி இருந்தார்.
“அவரை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அனைவரிடமும் நன்றாக பேசுவார். இந்த நாள் எங்களுக்கு வலிந்த நாள் ஆகும்,” என ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட் எடுத்திருக்கும் வீராங்கனை ஜூலான் கோஸ்வாமி கூறினார்.
பேனர்ஜி தன்னுடைய முதல் முதல்-நிலை போட்டி 1965/66-இல் விளையாடினார் மற்றும் கடைசி முதல்-நிலை போட்டி 1982/82 சீசனில் விளையாடினார்.