முன்னாள் வீரருக்கு கொரோனா.. உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்!
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகான் என்பவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது என மருத்துவ குழு தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் உச்சத்தை பெற்றுவருகிறது. உயிரிழப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது 72 வயதான இவர் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாகவும் இதனால் மூச்சுவிட கஷ்டப்பட்டு வரும் சவுகானுக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு இருப்பதாகவும் மருத்துவ குழு தெரிவித்திருக்கிறது.
சுமார் 60 சதவீதத்திற்கும் மேலான ஆக்சிசன் செயற்கையாக அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்த மருத்துவ குழு குறிப்பிட்டுள்ளது.
செத்தன் சவுகான் இந்திய அணிக்காக இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளிலும் 7 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். இவர் டெஸ்ட் அரங்கில் சுமார் 2000 ரன்களுக்கும் மேலாக அடித்திருக்கிறார். உள்ளூர் போட்டியில் இவர் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி அணிக்காக ஆடி இருக்கிறார்.
இவருக்கு 1981ஆம் ஆண்டு மத்திய அரசால் அர்ஜுனா விருது வழங்கப்பட்டிருக்கிறது.
சுனில் கவாஸ்கர் உடன் அதிகமுறை துவக்க வீரராக களமிறங்கி இருக்கிறார். இவர்கள் இருவரும் சுமார் 59 இன்னிங்ஸ்களில் துவக்க வீரர்களாக களமிறங்கி மூவாயிரத்துக்கும் மேலான ரன்களை அடுத்து இருக்கின்றனர்.
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் இறங்கிய இவர் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாநில அமைச்சராக பதவி வகித்து வந்தார்.