எனது நிலைமை ஆண்ட்ரியூ டைக்கும் ஏற்பட்டுவிட கூடாது; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 1

எனது நிலைமை ஆண்ட்ரியூ டைக்கும் ஏற்பட்டுவிட கூடாது; முன்னாள் வீரர் சொல்கிறார் !!

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 10 ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தவர் பட்டியலில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிக் லூயிஸ் முதலிடத்தில் உள்ளார்.

அன்று இங்கிலாந்து ஒருநாள் சர்வதேசப் போட்டி வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரான 481 ரன்களை எடுத்த அன்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை 9 ஓவர்களில் 100 ரன்களை விட்டுக் கொடுத்தார். 10 ஓவர்களை டை வீசியிருந்தால் மிக் லூயிஸை ஒருவேளை கடந்து சென்று வரலாற்றில் இடம்பிடித்திருப்பார்.

மிக் லூயிஸ் 10 ஓவர்களில் 113 ரன்களை விட்டுக் கொடுத்த ஒருநாள் போட்டி, பிரபலமான தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டிதான், ரிக்கி பாண்டிங் கேப்டனாக 105 பந்துகளில் 13 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 164 ரன்கள் விளாச ஆஸ்திரேலியா 434/4 என்று ரன் குவித்தது.

எனது நிலைமை ஆண்ட்ரியூ டைக்கும் ஏற்பட்டுவிட கூடாது; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 2

தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 49.5 ஓவர்களில் 438/9 என்று பரபரப்பாக வெற்றி பெற்றது. ஹெர்ஷல் கிப்ஸ் 111 பந்துகளில் 21 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 175 ரன்கள் விளாசித்தள்ளி பாண்டிங் இன்னிங்ஸை விரயமாக்கினார். இதில் மிக் லூயிஸ் என்ற ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் 10 ஓவர்களில் 113 ரன்களை அதிகபட்சமாக விட்டுக்கொடுத்தது இன்று வரை சாதனையாக உள்ளது.

மார்ச் 12, 2006 என்ற அந்த நாள் மறக்க முடியாத ஒருநாளாக தென் ஆப்பிரிக்க ரசிகர்களுக்கு மட்டுமல்ல அதை தொலைக்காட்சியில் பார்த்த இந்திய ரசிகரக்ளுக்கும்தான். இதே போட்டியில் ஜாக் காலிஸ் 6 ஓவர்களில் 70 ரன்களை விட்டுக்கொடுத்தார், ஒருவேளை இவர் தன் முழு 10 ஓவர்களை வீசியிருந்தால் இவர் கொடுத்த ரன்கள் உலக சாதனையாகியிருக்கலாம். ஆனால் விதி மிக் லூயிஸ் பக்கம் விளையாடி விட்டது, இதுவே அவரது கடைசி ஒருநாள் போட்டியாகவும் அமைய அவர் கரியரே காலியானது.

எனது நிலைமை ஆண்ட்ரியூ டைக்கும் ஏற்பட்டுவிட கூடாது; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 3

அதே போல் அன்று ஆண்ட்ரூ டை 9 ஓவர்களில் 100 ரன்களை விட்டுக் கொடுத்தது பற்றி மிக் லூயிஸ் ஆஸி. ஊடகத்துக்குக் கூறியபோது, அன்றைய தினம் மிக மோசமான நாள். நான் அன்றைய போட்டியை எப்படிப் பார்க்கிறேன் என்றால் விக்டோரியாவில் இரண்டு உலகச் சாதனையாளர்கள் இருக்கின்றனர். அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஷேன் வார்ன், இன்னொன்று நான், அதிகரன்களை ஒருநாள் போட்டியில் விட்டுக்கொடுத்தது.

அது என் கடைசி போட்டியாக அமைந்த்து, ஆண்ட்ரூ டை-க்கு அப்படியாகிவிடக்கூடாது, என்றார் மிக் லூயிஸ்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *