ஐ.பி.எல் தொடரின் இந்த ஒரு போட்டியை மறக்கவே முடியாது; மைக்கெல் ஹசி சொல்கிறார்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மாத்யூ ஹேடன். இவர் ட்விட்டர் மூலம் சக அணியின் ரெய்னாவிடன் அவரின் சிறந்த ஐபிஎல் கிரிக்கெட் தருணத்தை பகிரும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி ரெய்னா தனது சிறந்த ஐபிஎல் கிரிக்கெட் தருணத்தை பகிர்ந்தார்.
அடுத்து தென் ஆப்ரிக்காவின் ஃபாப் டூபிளஸிஸை சிறந்த ஐபிஎல் நினைவுகளை பகிரும் படி கேட்டுக்கொள்கிறேன் என ரெய்னா தெரிவித்திருந்தார். அதன்படி டூபிளஸிஸ் தனது சிறந்த ஐபிஎல் தருணத்தை பகிர்ந்தார். அதன் பிறகு டூபிளஸிஸ் மைக்கேல் ஹசியை தனது சிறந்த தருணங்களை பகிரும்படி கேட்டுக்கொண்டார். தற்போது ஹசி தனது சிறந்த தருணத்தை பகிர்ந்து கொண்டார்.

இதுகுறித்து ஹசி கூறுகையில், “கடந்த 2010 இல் தரம்சாலாவில் நடந்த போட்டிக்கு ஐந்தாவது இடத்தில் இருந்த நேரத்தில் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கினோம். போட்டி மிகவும் நெருக்கமான போட்டியாக இருந்தது. அப்போது தோனி களத்தில் இருந்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இர்பான் பதான் பவுலிங் செய்தார். அப்போது 2 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்டது.
Mr. Cricket took up the #MyIPLMoment challenge and names his favourites, the Fafulous 2018 Q1 and the evergreen 2010 Dharamshala #Thala special! @mhussey393 passes the challenge on to hat-trick singam @Lbalaji55! #WhistlePodu ?? pic.twitter.com/xip5agJYJ0
— Chennai Super Kings (@ChennaiIPL) April 17, 2020
அந்த நேரத்தில் கேப்டன் கூல் தோனி தொடர்ந்து இரண்டு சிக்சர்கள் பறக்கவிட்டார். தொடர்ந்து ஃபைனலுக்கு முன்னேறி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தில் கோப்பை வென்றோம். அதே போல முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பாலாஜியின் ஹாட்ரிக் மறக்க முடியாதது. தொடர்ந்து 2018 இல் நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான குவாலிபயர் போட்டியும் மறக்க முடியாத தருணங்கள்” என்றார். தற்போது பாலாஜியை தனது மறக்க முடியாத ஐபிஎல் தருணம் குறித்து பகிரும் படி ஹசி கேட்டுக்கொண்டுள்ளார்.