அணியின் முன்னாள் கேப்டன் திடீர் மரணம்! 1

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான பாப் வில்லிஸ் தனது 70ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு 1982 ஆம் ஆண்டு கேய்த் லெட்சர் சோதப்பலுக்கு பிறகு, பாப் வில்லிஸ் இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவர் 1982 முதல் 1984 வரை கேப்டன் பொறுப்பில் இருந்தார்.

அணியின் முன்னாள் கேப்டன் திடீர் மரணம்! 2

18 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 29 ஒருநாள் போட்டிகளில் கேப்டன் பொறுப்பு வகித்தார். பிறகு, 1984 ஆம் ஆண்டு அனைத்து வித போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்ற இவர். ஒரு சில வருடங்களில் வர்ணனையாளராக தனது பணியை தொடர்ந்தார்.

90 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய இவர் 325 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆண்டர்சன், பிராட் மற்றும் இயன் போதம் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.

அணியின் முன்னாள் கேப்டன் திடீர் மரணம்! 3

1981 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடரில் 43 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை கைப்பற்றியது இவரது சிறந்த பந்துவீச்சாகும். அந்த காலகட்டத்தில், இதுவே மிக சிறந்த பந்துவீச்சாகவும் இருந்தது.

வார்விக்ஷைர் அணிகக்காக 12 ஆண்டுகள் ஆடிய இவர் 398 டெஸ்ட் போட்டிகள் ஆகியிருக்கிறார். இதன் மூலம் 899 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, அணியின் சிறப்பான வீரராகவும் திகழ்ந்திருக்கிறார்.

அணியின் முன்னாள் கேப்டன் திடீர் மரணம்! 4

சர்வதேச ஓய்விற்கு பிறகு வர்ணனையாளராக இருந்து வந்த பாப், சில காலம் உடல்நலம் காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில், நேற்று மதியம் இவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் செய்தியை வெளியிட்டனர்.

“பாப் நம்ம விட்டு நீண்டதூரம் சென்றார். மிக சிறந்த கணவர், தந்தை, சகோதரர் மற்றும் தாத்தாவாக இருந்தவர் நம்மை விட்டு பிரிந்ததில் நெஞ்சம் கணக்கிறது” என குடும்பத்தினர் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவரது இறப்பிற்கு, இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இயன் போதம், முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *