தோனியா? கங்குலியா? யார் செம்ம கேப்டன்..! சண்டை மூட்டிவிட்ட முன்னாள் கேப்டன்!
இந்திய அணியில் கங்குலி மற்றும் தோணி இருவரில் யார் சிறந்த கேப்டன் என கருத்தினை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை 2000களில் சிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் கங்குலி. இந்திய அணியை பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் இளம்வீரர்களை கொண்டு கட்டமைத்தார்.

2003ஆம் ஆண்டு சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தி ஒருநாள் போட்டிக்கான உலககோப்பையின் இறுதிப்போட்டி வரை எடுத்து சென்றார். அதற்க்கு அடுத்ததாக சில சர்ச்சைகள் அணியில் எழுந்ததால், கேப்டன் பொறுப்பு ராகுல் டிராவிட் வசம் சென்றது. 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி லீக் சுற்றிலேயே வெளிவந்தது. இதனால் நாடெங்கும் பெரும் சர்ச்சை வெடித்தது.
இதற்கிடையில் இளம் வீரர்களை வழிநடத்தி 2007 ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் போட்டிக்கான உலகக்கோப்பையை வென்று அனைவரின் பார்வையும் தன்பக்கம் திருப்பினார் தோனி.

Photo by Ron Gaunt/ BCCI/ Sportzpics
சிறிதுகாலம் கழித்து ஒருநாள் போட்டிக்கான அணியை வழிநடத்தும் வாய்ப்பும் தோனிக்கு கிட்டியது. 2011ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையை வென்று தந்ததும் வரலாறு.
2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலும், 2017ஆம் ஆண்டிலிருந்து ஒருநாள் போட்டிகளில் இருந்தும் தனது கேப்டன் பொறுப்பை துறந்தார் தோனி. இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் கங்குலி மற்றும் தோனி இடையே யார் சிறந்த கேப்டன் என்ற கேள்வி தொடர்ந்து நிலவி வருகிறது.
இருவரில் யார் சிறந்தவர் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் லம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து லம்ப் கூறுகையில்,

“கங்குலி மிகவும் ஷார்ப் தான். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நான் தோனியை தான் தேர்வு செய்வேன்” என்றார்.
ஆலன் லம்ப் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக கடந்த 1982 முதல் 1992 வரை விளையாடினார். இவர் 79 டெஸ்ட், 122 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.