தென்னாப்பிரிக்கா அணியின் கிரிக்கெட் வீரராக 1960களில் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கோலின் ப்ளான்ட் அவர்கள் தனது 80வது வயதில் காலமானார் (ஏப்ரல்14).
அவர் தனது கடைசி தருணத்தை இலண்டனில் உள்ள அவரது இல்லத்தில் களித்தார். அவர் பெருங்குடல் புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடி வந்தார்.
கோலின் ப்ளான்ட் தென்னாப்பிரிக்கா அணிக்காக 1961 முதல் 1966 வரை மொத்தம் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 49.08 என்ற சராரியுடன் 1669 ரன்களை எடுத்துள்ளார். அவரின் இந்த சராசரி நம்மை வியப்பூட்டும் ஒன்றாக உள்ளது.
கோலின் ப்ளான்ட் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடிய போதிலும், அவர் பிறந்தது ஜிம்பாப்வேயின் புலவயோவில் தான். இவர் தனது முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ரோடிஷியா அணிக்காக அதிக ரன்களை எடுத்துள்ளார். இதன் காரணமாக இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாட தேர்வுபெற்றார்.
கோலின் ப்ளான்ட் தனது முதல் போட்டியை 1961இல் நியூசிலாந்த் அணிக்கு எதிராக விளையாடினார். இவரின் சர்வதேச கிரிக்கெட் பயணம் சரியானதாக அமையவில்லை. இவர் 1966இல் ஜோகனஸ்பெர்க்கில் நடைபெற்ற போட்டியின் போது, பவுண்டரிக்கு செல்லும் பந்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, பவுண்டரி சுவருடன் மோதியதில் அவரின் முட்டிப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.
கோலின் ப்ளான்ட் 1960களின் அதிரடி பீல்டிங்கான முன்னோடியாக திகழ்ந்தார். இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரர் அலி பச்சர் இவரை முற்றிலும் வேறு கிரகத்திலிருந்து வந்தவர் என்று கூறியுள்ளார். இது கோலின் ப்ளான்டின் பீல்டிங் திறனை தெரியப்படுத்துகிறது.
கோலின் ப்ளான்ட் தனது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபிறகு, இங்கிலாந்தில் பயிற்சியாளர் பணி கிடைத்து, அங்கேயே அவர் வசிக்க தொடங்கினார். இவர் கடைசியாக 2004இல் MCCக்கு பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார்.