முஸ்தபிகிர் ரஹீம்
பங்களாதேஷ் அணியின் முன்னாள் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் பங்களாதேஷ் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவராக தன்னுடைய காலங்களில் திகழ்ந்து வந்தார்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் பங்களாதேஷ் அணிக்காக விளையாடினார், அப்பொழுது இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெறும் நிலையில் சென்று தோல்வியை தழுவியது. இதனால் விரக்தி அடைந்த பங்களாதேஷ் கேப்டன் ரஹீம் அந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது தனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது என்று பதிவிட்டிருந்தார். பின் அதை நீக்கி விட்டார் இதனால் இதை இந்திய ரசிகர்களிடம் மிகவும் வெறுக்கத்தக்க வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
