ஆண்ட்ரூ ஃபிலின்டாப்
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளின்ட் ஆப் இந்திய ரசிகர்கள் இடத்தில் மிகவும் வெறுக்கத்தக்க ஒரு வீரராக திகழ்ந்தவர். 2002 இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முத்தொடர் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது இதனால் உற்சாகம் அடைந்த பின் தனது டீ-சர்ட்டை கழட்டி தனது சந்தோஷத்தை வெளிக்காட்டினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இந்திய வீரர் மற்றும் அந்தத் தொடரில் இந்திய அணி கேப்டனாக திகழ்ந்த கங்குலி அந்த முத்தொடர் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வெற்றி பெற்றது. அப்பொழுது தனது பழியைத் தீர்க்கும் வகையில் தனது டீ-சர்ட்டை கழட்டி கங்குலி ஆரவாரம் செய்தார். இந்த செயல் அப்பொழுது மிகப் பெரும் பேசுபொருளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2007 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வீரர் யுவராஜ் மற்றும் இவருக்கு மிகப் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.ஃபிலின்டாப் இந்த இழிவான செயல் இந்திய ரசிகர்களிடத்தில் மிகப்பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
